news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (02.08.2026)

இறையாட்சி, அதிகாரத்தாலும் வல்லமையாலும் அல்ல; மாறாக, தாழ்மை, பொறுமை மற்றும் அன்பின் வழியே அமைதியாக வளர்கிறது.” 

ஜூலை 19, மூவேளைச்  செப உரை

அழகு, இசை மற்றும் கலை மனிதர்களின் பார்வையை விண்ணகத்தை நோக்கி உயர்த்தி, துன்பங்கள் நிறைந்த உலகில் நம்பிக்கையை அளிக்கின்றன.”

ஜூலை 18, அல்பானோ மறைமாவட்டம்  இசைக் கச்சேரியில் சிறப்பு உரை

இன்றைய உலகின் சவால்களை எதிர்கொள்வதில் தங்கள் கைகளில் கறைபடும் என்ற அச்சமின்றி, ஆயர்களும் நம்பிக்கையாளர்களும் துணிவுடன் செயல்படவேண்டும்.”

ஜூலை 13,  ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் (FABC) 12-வது நிறைவுச் செய்தி

இயேசு கிறிஸ்துவே தந்தையால் உலகில் விதைக்கப்படும் உயிருள்ள விதையே. மனிதரின் மீட்பிற்காகத் தம் உயிரை அர்ப்பணித்து, பலன்தரும் விதையாக இன்றும் உலகில் தொடர்ந்து செயல்படுகிறார்.”

ஜூலை 12,  நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரை

வன்முறை, வெறுப்பு மற்றும் பாகுபாடுகளால் சிதைந்திருக்கும் இன்றைய உலகில் ஒற்றுமை, ஒருவரையொருவர் அரவணைக்கும் மனப்பான்மை மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்க அனைவரும் இணைந்து செயல்படவேண்டும்

ஜூலை 11, போர்கோ லவுதாத்தோ சி (Borgo Laudato si\') வளாக நிகழ்வு