இத்தாலியின் லோடி (Lodi) மறைமாவட்டத்தில் நடைபெற்ற 27-வது ‘கொலம்பனஸ் தினம்’ (Columbanus Day) விழாவை முன்னிட்டு அம்மறைமாவட்ட ஆயர் மவுரிசியோ மல்வெஸ்டிட்டிக்கு, வத்திக்கான் வெளியுறவுச் செயலர் கர்தினால் பியெட்ரோ பரோலின் வழியாகத் திருத்தந்தை லியோ அனுப்பிய கடிதத்தில், “பரஸ்பர குற்றச்சாட்டுகள் மற்றும் போர்களின் பேரழிவுகளுக்கு மத்தியில், மனித இதயங்களில் உண்மையான மனிதாபிமானத்தை விதைக்க இறைவனின் இரக்கம் மட்டுமே ஒரே வழி” என்று வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பாவில் கிறித்தவப் பாரம்பரிய விழுமியங்களை மீண்டும் கண்டறியவும், தற்காலச் சவால்களை எதிர்கொள்ளவும் தூய கொலம்பனஸின் ஆன்மிக மரபு பெரிதும் உதவுகிறது என்று பாராட்டிய திருத்தந்தை, “போர் மற்றும் பிளவுகளின் உன்னதத் தீர்வாக ‘மன்னிக்கும் மனப்பான்மை’ இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.