“தற்போது முதியோர் இல்லங்கள் சமூகத்தில் பெருகி வருவது கவலைக்குரிய செய்தியாகும். இந்தப் பிரச்சினைக்குச் சமூக அளவில் உரிய தீர்வு எட்டப்படவேண்டும். கல்வியோ, பதவியோ, பணமோ ஒருவருக்கு இருப்பதால் பயனில்லை; மாறாக, மனித நேயமும், மனிதத்தன்மையும் இருத்தல் அவசியம். அந்த அடிப்படைப் பண்பு இல்லாமல், வேறு எத்தகைய பெருமைகள் இருந்தாலும் எதற்கும் உதவாது. அரசியல்வாதியாக இருந்தாலும் சரி; மருத்துவர், ஐ.ஏ.எஸ். அதிகாரி என எந்தப் பொறுப்பில் இருந்தாலும் சரி, முதலில் நல்ல மனிதராக இருக்கவேண்டும் என்பதே அடிப்படைப் பண்பாகும். நம் இதயத்தில் சக மனிதர் மீதான அன்பு இருக்கவேண்டும்.”
மேமிகு. ஆர்.வி.
ஆர்லேகர்,
தமிழ்நாடு
ஆளுநர்
“தமிழ்நாட்டு
அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, கர்நாடக அரசியல் செல்வாக்குடன் பெங்களூருவை மையமாகக் கொண்டு தொழில் நடத்தி வரும் கே. வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்டது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
தமிழ்நாட்டு
அரசியல் பொருளாதார, சமூக நிலைகள் பற்றியப் புரிதலும், கலை, இலக்கியம், பண்பாட்டுத் துறைகள் குறித்த புரிதலும் இல்லாத ஒருவர், தமிழ்நாட்டு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக இருப்பதை மக்கள் ஏற்கமாட்டார்கள். அவரது நியமனத்தைத் தமிழ்நாடு முதல்வர் மறுபரிசீலினை செய்து, பொருத்தமான பிரதிநிதியை நியமனம் செய்யவேண்டும்.”
திருமிகு. மு.
வீரபாண்டியன்,
இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச்
செயலர்
“அ.தி.மு.க.
எம்.எல்.ஏ.-க்கள் ராஜினாமா
செய்வது தமிழ்நாட்டு அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல, எம்.எல்.ஏ-க்கள் எந்தப்
பின்னணியில் ராஜினாமா செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதை அ.தி.மு.க.வின் உள்கட்சி
விவகாரமாகவும் கடந்து செல்லமுடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் திடீர் திடீரென ராஜினாமா செய்வது சனநாயகத்திற்கு உகந்தது அல்ல.”
திருமிகு. தொல்.திருமாவளவன்
விடுதலைச்
சிறுத்தைகள்
கட்சித் தலைவர்