கேளாத செவிகள் கேட்கட்டும்; காது என்ற ஒன்று கேட்கத்தானே! அதைவிடுத்து வேறென்ன இதில் புதுவிதம் இருக்கு? இருக்கு! ‘கற்றலைவிடக் கேட்டல் மிக நன்று’ என்று நம் வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளார். இதைக் கொஞ்சம் அசைபோட்டால் இதன் முக்கியத்துவம் தெரியவரும். ‘கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கமாட்டியா?’ எனக் கேட்பதும், ‘கொஞ்சம் உன் காதக் கொடு, இரகசியம் சொல்லணும்’ என ஒருவரை இழுப்பதும் இதனால்தான்.
ஜூலியஸ்
சீசர் கொலையுண்ட நேரத்தில் மார்க் ஆண்டனி ஆவேச உரை நிகழ்த்தி அனைவரையும் தன் பக்கம் இழுக்க அவர் ஆரம்பித்த முதல் வார்த்தை: “Friends, Romans, countrymen, lend me your ears.” இங்கு அவர் ‘உங்கள் காதுகளை எனக்குக் கடன் கொடுங்கள்’
எனும் பொருளில் சொல்லவில்லை; மாறாக, ‘உங்கள் கவனம் எனக்கு வேண்டும்; என் எண்ணத்தை நீங்கள் கேட்க வேண்டும்’
எனும் பொருளில் தொடங்கியுள்ளார். அதேபொருளில்தான் நானும் சொல்கிறேன்... Please lend
me your ears.
உறுப்புகளை
மையப்படுத்தி ஒரு சில முக்கியத்துவத்தை உணர்த்துவது தமிழில் தொன்றுதொட்டு இருக்கும் பழக்கம். ‘என் கண்ணுல்ல’
எனப் பிள்ளைகளைக் கொஞ்சுவதும், ‘என் இதயமே நீதானடி!’ எனக் காதலியிடம் கெஞ்சுவதும், ‘ரொம்பப் பேசுனா உதட்டப் பேத்துருவேன்’ எனப்
பிடிக்காதவர்களிடம் சொல்வதும், ‘நான் இங்க நாய் மாதிரி கத்திக்கிட்டு இருக்கேன்; கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டா கொறஞ்சா போயிருவீங்க?’ என மனைவி கணவனை
வசைபாடுவதும், ‘மூக்குமேல விரல் வைக்கிற அளவுக்கு ஒரு யோசனையைச் சொல்லிட்டாப்ல’ எனப்
பிடித்தவர்களைப் பாராட்டுவதும்... என இதுபோன்ற உறுப்புகளை
மையப்படுத்திப் பேசுவது என்பது நாம் சொல்ல வருவதற்கு மேலும் பொருள் சேர்க்க இம்முறை பயன்படுத்தப்படுகிறது.
வெளி
உறுப்புகள் பெரும்பாலும் பாராட்டுவதற்கும், உள் உறுப்புகள் ஒருவரைக் கொச்சையாகத் திட்டுவதற்கும் ஆண்டாண்டு காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நமக்கு இருக்கக்கூடிய எல்லா உறுப்புகளும் மிக அவசியமானவை. அதில் காது மிக அவசியமானது, அறிவைப் பெருக்குவதில் இதன் பங்கு பெரியது. காது என்பது கேட்கும் அமைப்பின் ஒரு பகுதியாகும். இது சுற்றுப்புறத்தில் உள்ள ஒலி அலைகளைப் பெற்று, அவற்றை வெளிக்காது, நடுக்காது மற்றும் உள்காது வழியாக மூளைக்கு அனுப்புகிறது. இந்த ஒலி அலைகள் மின்சாரச் சிக்னல்களாக மாற்றப்பட்டு மூளையால் செயலாக்கப்படுகின்றன. காதின் முக்கியப் பணி, கேட்கும் திறன் மூலம் தகவல்களைப் பெறுவதும், மனிதர்களுக்குத் தொடர்பு, கற்றல் மற்றும் சூழலுக்கு ஏற்ப பதிலளிக்கும் திறனை வழங்குவதும் ஆகும்.
மனித
உடலில் காது மற்றும் சிந்தனை (எண்ண) செயல்முறை ஆகியவை மிகவும் அற்புதமான இரண்டு அம்சங்களாகும். காது என்பது ஒலிகளைக் கேட்க உதவும் ஓர் உடல் உறுப்பு. அதே நேரத்தில், சிந்தனை செயல்முறை என்பது புரிந்துகொள்வது, பகுத்தறிவது மற்றும் முடிவெடுப்பது போன்ற மனச் செயல்பாடுகளைக் குறிக்கிறது. இவை வெவ்வேறு பணிகளைச் செய்தாலும், மனிதன் தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் திறம்படத் தொடர்புகொள்ள இரண்டும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவையாக உள்ளன.
காதின்
மூலம் பெறப்பட்ட எண்ண ஓட்டம் சிந்தனை வடிவம் பெற்று, அதன் செயல்முறை அமைப்பு மூளையில் நிகழ்கிறது. இது தகவல்களைப் புரிந்துகொள்வது, சூழ்நிலைகளைப் பகுப்பாய்வு செய்வது, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, கருத்துகளை உருவாக்குவது மற்றும் முடிவுகளை எடுப்பது போன்ற செயல்களை உள்ளடக்கியது. சிந்தனைகள் ஒருவரின் அறிவு, அனுபவம், உணர்வுகள் மற்றும் பார்வைகளால் வேறுபடுகின்றன. காது வழியாகப் பெறப்பட்ட சிந்தனை, மூளை மூலம் செயல்முறை பெறுவது, நாம் கண்டு மகிழும் ஓர் அறிவார்ந்த செயல்பாடாகும்.
அறிவுப்
பெருக்கத்திற்கு அளப்பரிய பணியாற்றும் அமைப்பாக நம் காது செயல்படுவது ஆச்சரியம் தரும் ஒன்றுதானே! காது நமக்குக் கிடைக்கப்பெற்ற எண்ண அலைகளை ஒலித் தகவலாக மூளைக்கு வழங்குகிறது; சிந்தனை செயல்முறை அந்தத் தகவல்களுக்கு அர்த்தம் அளிக்கிறது.
உதாரணமாக,
ஓர் உரையைக் கேட்கும்போது, காது அந்த ஒலிகளைப் பெறுகிறது. பின்னர், மூளை அந்த வார்த்தைகளைப் புரிந்துகொண்டு, அதன் பொருளை ஆராய்ந்து, அதற்கான கருத்துகளையும் பதில்களையும் உருவாக்குகிறது. காது இல்லையெனில் ஒலித் தகவல்கள் கிடைக்காது; சிந்தனை செயல்முறை இல்லையெனில் அந்த ஒலிகளுக்கு அர்த்தமே இருக்காது.
காது
தகவல்களைப் பெறுகிறது, சிந்தனைச் செயல்முறை அந்தத் தகவல்களை மதிப்பீடு செய்து, அவற்றை அறிவு மற்றும் செயலாக மாற்றுகிறது. ஆதலால்தான் செவிச்செல்வம் எத்துணை மேன்மை மிக்கது என்பதை நம் திருவள்ளுவர் கூட மிகச் சிறப்பாகக் குறளில் கூறியுள்ளார்.
செல்வத்துட்
செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந்
தலை (குறள் 411)
காது
மற்றும் மூளை மனித வாழ்க்கையில் தனித்துவமானது. ஒன்றுக்கொன்று துணைபுரிந்து நம் முன்னேற்றத்திற்கு உதவுகிறது. இவை இரண்டும் அறிதல் மற்றும் புரிதல் எனும் இரு வளர்ச்சிகளுக்கு உறுதுணையாக உள்ளது. இவை இரண்டும் இணைந்து செயல்படுவதன் மூலம் மனிதனுக்குக் கற்றல் மற்றும் சிறந்த முடிவெடுக்கும் திறன் கிடைக்கிறது. இதன் மூலம் மனித உடலின் உணர்வு அமைப்புகளுக்கும் மனத்தின் அறிவாற்றலுக்கும் இடையேயான அற்புதமான ஒத்துழைப்பு வெளிப்படுகிறது.
காது
என்பது மனித உடலின் மிக முக்கியமான உணர்வு உறுப்புகளில் ஒன்றாகும். இது கேட்கும் திறனை மட்டுமல்லாமல், உடலின் சமநிலையையும் பராமரிக்க உதவுகிறது.
காதின்
முதன்மைப் பணி ஒலிகளை உணர்வதாகும். மனிதர்களின் பேச்சு, இசை, இயற்கை ஒலிகள் மற்றும் எச்சரிக்கைச் சத்தங்கள் போன்றவற்றைக் கேட்டுப் புரிந்துகொள்ள காது உதவுகிறது. கேட்கும் திறன் இல்லாமல் பயனுள்ள தொடர்பாடல் சாத்தியமில்லை. மற்றவர்களின் கருத்துகளையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ள காது முக்கியப் பங்கு வகிக்கிறது.
குழந்தைகள்
மொழியைக் கற்றுக்கொள்வதிலும், மாணவர்கள் பாடங்களைக் கேட்டு அறிவைப் பெறுவதிலும் பெருக்குவதிலும் காது முக்கியப் பங்காற்றுகிறது. கேட்பதன் மூலம் மனிதர்கள் புதிய தகவல்களை அறிந்துகொள்கிறார்கள். உள்காதில் உள்ள சமநிலை அமைப்பு (Vestibular System) உடலின்
நிலைத்தன்மையையும் சமநிலையையும் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் நிமிர்ந்து நிற்பது, நடப்பது மற்றும் ஓடுவது போன்ற செயல்கள் சீராக நடைபெறுகின்றன.
காது
என்பது வெறும் கேட்கும் உறுப்பாக மட்டுமல்ல; அது கற்றல், தொடர்பாடல், பாதுகாப்பு மற்றும் உடல் சமநிலை ஆகியவற்றிற்கும் அத்தியாவசியமான ஓர் உறுப்பு ஆகும். எனவே, காதின் அவசியத்தைக் காதோரமாய் கூறியுள்ளேன். எண்ணங்களை மேம்படுத்த, நம் வாழ்வை உயர்த்திப் பிடிக்க நம் காது நமக்கு அவசியமானது, இதைப் பாதுகாப்பது
ஒவ்வொரு மனிதனின் பொறுப்பாகும். இத்தனை பயன்களைத் தரும் காதுகளை நாம் அலட்சியம் செய்யாது இருப்போம். காதைத் திருகி நம்மை யாராவது வம்பிழுக்கும்போது அவரின் காதருகே கூறுங்கள், ‘கேட்கச் செவி உள்ளவன் கேட்கட்டும், கேட்க இயலாதவன் வலிகளை உணரட்டும்’
என்று.
நல்ல
நல்ல எண்ணங்களுக்குச் செவி கொடுப்போம். வாழ்க்கைக்கான வழிகளை நாமே கண்டெடுப்போம்.
(தொடரும்)