ஆலயத்தில் சிறுவன் இயேசுவைக் கண்டுபிடித்த நிகழ்வை விளக்கும் திருவிவிலியப் பகுதியானது தனது தெய்வீக மகனின் வாழ்விலும், பணியிலும் மரியா கொண்டிருந்த பங்களிப்பானது வளர்ந்து வருவதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.
1. புனித
திருமுழுக்கு யோவானின் இறைவாக்கு உரைக்கும் பணியின் தொடக்கத்திற்கு முன்னதாக புனித லூக்கா நற்செய்தியாளர் இயேசுவின் குழந்தைப் பருவ விவரிப்பின் கடைசிப்பகுதியாக அவரது எருசலேம் ஆலயத் திருப்பயணத்தை விவரிக்கின்றார். இது எருசலேமில் இயேசுவின் பல ஆண்டுகால மறைமுகமான
வாழ்வை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டும் வழக்கமானதொரு சித்தரிப்பாகும்.
இதன்மூலம்
தமது ‘தந்தையின் இல்லத்திற்குள்’ அவர்
மேற்கொள்ளும் இந்த இரண்டாவது ‘நுழைவிற்கு’ ஏற்கெனவே
ஆலயத்தில் தமது அர்ப்பணிப்பைக் குறித்திருந்த கடவுளுக்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்ததன் அர்த்தத்தை அளிக்கிறார்.
இந்தத்
திருவிவிலியப் பகுதியானது ‘இயேசு யோசேப்பிற்கும் மரியாவிற்கும் கீழ்ப்படிந்திருந்தார்’ என்ற
லூக்கா நற்செய்தியாளரின் விவரிப்பிற்கு முரணாக இருப்பதாகத் தெரிகிறது (லூக் 2:51). ஆனால், நாம் சற்று உற்றுநோக்கினால், இங்கு அவர் ஒரு மகனாக தமது இயல்பான நிலைக்குத் தன்னிலை உணர்ந்து வேண்டுமென்றே முரண்படுவதாகத் தெரிகிறது. எதிர்பாராத விதமாக மரியா மற்றும் யோசேப்பு ஆகியோரிடமிருந்து ஒரு திட்டவட்டமானதொரு பிரிவினையை ஏற்படுத்துகிறார். தமது நன்னடத்தை விதியாக இயேசு தமது வானகத் தந்தைக்கு மட்டுமே உரியவர் என்று கூறுகிறார்; தமது இவ்வுலகக் குடும்பத்துடனான உறவுகளைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை.
இயேசுவின் நடத்தையானது
வழக்கத்திற்கு
மாறான
ஒன்றாகத்
தோன்றுகிறது
2. இந்நிகழ்வின்
வழியாக, மீட்பின் மறையுண்மையைப் புரிந்துகொள்ளும் வகையில் இயேசு தமது தாயைத் தயார்படுத்துகின்றார். எருசலேம் ஆலயத்தில் தங்குவதற்காகச் சிறுவன் இயேசு அவர்களிடமிருந்து விலகியிருக்கும் அந்த மூன்று வியத்தகு நாள்களில், மரியாவும் யோசேப்புவும் இயேசுவின் பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பின் கொண்டாட்டத்திற்கெனத்
தங்களையே தயாரிக்கும் அதன் முன்சுவையை அனுபவிக்கின்றார்கள்.
எருசலேம்
ஆலயத்திற்குப் பாஸ்கா கொண்டாடச் சென்றவர் அங்கேயே தங்கவேண்டும் என்ற தமது ஆசையைத் தமது பெற்றோரிடம் கூறாமலேயே தமது தாயையும் யோசேப்புவையும் சொந்த ஊரான கலிலேயாவுக்குப் புறப்பட அனுமதித்த இயேசு, அவர்கள் அனுபவித்த அந்தத் துன்பத்திற்கான மறைபொருளின் வழியாகப் பின்னாளில் தமது பாஸ்கா அறிவிப்பின் வழியாக அவரது சீடர்களோடு அவர்கள் அனுபவிக்கவிருந்த அந்தப் பாஸ்கா மகிழ்ச்சிக்கு அவர்களை இட்டுச்செல்கின்றார்.
நற்செய்தியாளர்
லூக்காவின் விவரிப்பின்படி, ஒருநாள் பயணத்திற்குப் பிறகு நாசரேத்திற்குத் திரும்பிய யோசேப்புவும் மரியாவும் காணாமல்போன இயேசுவின் நிலையைப் பற்றி நினைத்துக் கவலைப்படுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள். அவர்களின் உறவினர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடையே சற்று ஏமாற்றத்தோடு அவரைத் தேடுகிறார்கள். எருசலேமிற்குத் திரும்பி வந்து அவரை ஆலயத்தில் கண்டதும், “அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டும், அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டும் இருந்தார்”
(லூக் 2:46). அதைக்கண்டு அவர்கள் மலைத்துப் போனார்கள். அவரது நடத்தையானது வழக்கத்திற்கு மாறான ஒன்றாகத் தோன்றுகின்றது. மூன்று நாள்களுக்குப் பிறகு அவரை அவர்கள் கண்டுபிடித்தல் என்பது அவரது பெற்றோருக்கு அவரின்
ஆளுமை மற்றும் பணியைப் பற்றிப் புரிந்துகொள்ள உதவியது என்றும் நாம் பொருள் கொள்ளலாம்.
பின்னாளில்
தமது பொதுவாழ்வில் செய்ய வேண்டியதை இப்பொழுதே ஓர் ஆசிரியரைப் போன்று அனைவரும் வியக்கும் வகையில் பேசுகின்றார்: “அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும், அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர்”
(லூக் 2:47). கேட்போரை
வியப்பில் ஆழ்த்தும் வகையிலானதொரு ஞானத்தை வெளிப்படுத்திய அவர், தமது மீட்புப் பணியின் சிறப்பியல்புகளாக இருக்கும் உரையாடலுக்கான (the art of dialogue) பயிற்சியை
அப்பொழுதே செய்யத் தொடங்குகிறார்.
இயேசுவின்
தாய் அவரிடம் இவ்வாறு கூறுகின்றார்: “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” (லூக்
2:48). இவ்வார்த்தைகளில்
பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் ஏற்படுத்தும் துன்பங்களைப் பற்றிக் கேட்கும் ‘குரலின்’ எதிரொலியை நாம் காணலாம். மேலும், இவ்வார்த்தைகள் சோதனைக் காலங்களில் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் தமது இதயத்தின் ஆழத்தில் எழுப்பும் கேள்விகளாகும்.
3. மரியாவின்
கேள்விக்கு இயேசு தரும் கேள்வி வடிவிலான பதில் இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதொன்றாகும்:
“நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” (லூக் 2:49).
இப்பதில்
வழியாக அவர் தாம் யார் என்பதன் மறையுண்மையை எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதத்தில் யோசேப்பிற்கும் மரியாவிற்கும் வெளிப்படுத்துகிறார். இவ்வகையில் வெளித் தோற்றங்களைக் கடந்து செல்ல அவர்களை அழைப்பதோடு, தமது எதிர்காலத்திற்கான புதிய எல்லைகளையும் அவர்களுக்கு முன்பாக விரித்துக் காட்டுகிறார்.
துயருற்ற
தம் தாய்க்கு அளித்த பதிலில், இயேசு தமது நடத்தைக்கான காரணத்தை உடனடியாக வெளிப்படுத்துகிறார். மரியா யோசேப்பைச் சுட்டிக்காட்டி ‘உன் தந்தை’ என்று குறிப்பிடுகிறார். ஆனால், இயேசுவோ தமது வானகத் தந்தையைக் குறிக்கும் விதமாக ‘என் தந்தை’ என்று பதில் அளிக்கிறார்.
தமது
தெய்வீகப் பிறப்பைக் குறிப்பிடுகையில், தமது வானகத் தந்தை வாழும் இடமான கோவிலை அவர் வசிக்குமிடமாகக் (natural place) கூற அவர்
அதிகம் விரும்பவில்லை. ஏனெனில், அவர் தமது வானகத் தந்தையின் திட்டத்தை நிறைவேற்றுவதிலேயே மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இவ்வாறு தம் தந்தையின் விருப்பமே, தாம் கீழ்ப்படியவேண்டிய ஒரே நெறிமுறை என்பதை வலியுறுத்த விரும்புகிறார்.
கடவுளின்
திட்டத்திற்கு அவர் தம்மை முழுமையாக அர்ப்பணித்ததைக் குறிக்கும் இந்தக் குறிப்பானது, நற்செய்தி உரையில் ‘நான் துன்பப்பட வேண்டும்’
என்ற வார்த்தைகளால் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் பின்னாளில் அவரது துன்பம் பற்றிய முன்னறிவிப்பிலும் தோன்றலாம் (காண்க: மாற் 8:31).
அதன்
பிறகு அவரது வானகத் தந்தை அவரை எங்கு வழிநடத்துகிறாரோ அங்குச் சென்று தமது பணியை நிறைவேற்ற அவரை அனுமதிக்குமாறு அவரது பெற்றோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
4. நற்செய்தியாளர்
லூக்கா, “அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை” (லூக்
2:50) என்று குறிப்பிடுகின்றார்.
யோசேப்புவும்
மரியாவும் அவரது பதிலின் பொருளையோ, பெற்றோரின் அக்கறைக்கு அவர் பதிலளிக்கும் விதத்தையோ (வெளிப்படையாக நிராகரித்தல்) புரிந்துகொள்ளவில்லை. இந்த மனப்பான்மையின் மூலம் தமது வானகத் தந்தையுடனான நெருக்கத்தின் மறைபொருளின் அர்த்தங்களை வெளிப்படுத்த இயேசு எண்ணுகிறார். மரியா, தான் அனுபவித்துக் கொண்டிருக்கும் சோதனையுடன் அவற்றை எவ்வாறு தொடர்புபடுத்துவது என்று தெரியாமலேயே அவற்றை
உள்ளுணர்வால் அறிகிறார்.
மீட்புப்பணியில்
மரியா
புதியதொரு
பரிமாணத்தை
அடைகின்றார்
உண்மையிலேயே
இந்தக் கடினமான காலத்தை மரியா எப்படி கடக்கின்றார் என்பதை நற்செய்தியாளர் லூக்காவின் வார்த்தைகள் நமக்குக் கற்பிக்கின்றன. மரியா, “இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தனது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்” (லூக்
2:51) என்கிறார் நற்செய்தியாளர் லூக்கா. இயேசுவின் தாய் இந்த நிகழ்வுகளை, கிறிஸ்து பிறப்பில் அவருக்கு வெளிப்படுத்தப்பட்ட தனது மகனின் மறைபொருளுடன் தொடர்புபடுத்துகின்றார். மேலும், ஆழ்ந்த தியானத்தின் அமைதியில் அவற்றைச் சிந்தித்து இறைவனுக்குத் தன்னையே அர்ப்பணிக்கும் மன நிலையுடன் ‘ஆம்’ எனக்
கூறி, இறைத்திட்டத்திற்கு ஒத்துழைக்கத் தன்னையே அர்ப்பணிக்கின்றார்.
இவ்வாறு, மரியா
தனது தாய்மையிலிருந்து வரும் இயல்பான நிலையிலிருந்து படிப்படியாக விடுபட்டு, தனது மகனின் பணிக்குத் தன்னை அர்ப்பணிக்க வழிவகுக்கும் நிகழ்வுகளின் சங்கிலியில் முதல் இணைப்பு உருவாக்கப்படுகிறது.
எருசலேம்
ஆலயத்தில் தமது பணிக்கு முன்னுரையாக இயேசு தம் தாயைத் தம்முடன் இணைத்துக் கொள்கிறார்; இனி மரியா இயேசுவைப் பெற்றெடுத்த தாய் மட்டுமல்ல; மாறாக, இறைத் தந்தையின் திட்டத்திற்குத் தானே கீழ்ப்படிவதன் மூலம் மீட்பின் மறைபொருளில் ஒத்துழைக்கக்கூடிய ஒரு பெண்மணியாகவும் விளங்குகிறார்.
இவ்வாறு
மிகுந்த அர்த்தம் நிறைந்த ஒரு நிகழ்வைத் தன் இதயத்தில் இருத்திக்கொண்டு, அன்னை மரியா, மீட்புப் பணியில் தனது ஒத்துழைப்பின் ஒரு புதிய பரிமாணத்தை அடைகிறார்.
மூலம்:
John Paul II, Mary co-operates by personal obedience, in «L’Osservatore
Romano», Weekly Edition in English, 22 January 1997, p. 11.