“தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம், அதிகப்படியான வெள்ள நீரைக் கொண்டுள்ள மாநிலங்களிலிருந்து பற்றாக்குறையுள்ள பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதன் மூலம், மேற்கு மாநிலங்களில் வெள்ளப் பாதிப்புகள் இல்லாமல் போகும். தீபகற்ப மாநிலங்களில் வறட்சியும் பஞ்சமும் மறையும். வெள்ளம், வறட்சி இவற்றிற்கான பல்லாயிரம் கோடி செலவீனங்களும் நட்டமும் தவிர்க்கப்படும். சுமார் இரண்டரை கோடி ஹெக்டேர் நிலங்கள் கூடுதலாகப் பாசன வசதி பெறும்.”
உயர்மிகு. சி.பி.
இராதாகிருஷ்ணன்,
குடியரசுத் துணைத் தலைவர்
“தொடர்ந்து வெளிப்படும் தமிழர் தொன்மையின் தடங்களைப் பாதுகாப்போம். தடங்கல் எதுவரினும், வரலாற்று உண்மையை நிறுவுவோம். அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்யவேண்டும். தமிழரின் வரலாற்றையும் நமது பண்பாட்டையும் குறைத்துக் கூறியும், சிதைத்து எழுதியும் வருவதோடு, வரலாற்றைத் திரிபுவாதங்களால் திசைதிருப்பும் சூழ்ச்சிகளும் அரங்கேறும் காலத்தில், தமிழ்த்தொன்மை உண்மைச் சான்றுகளோடு வெளிப்பட்டு வருகிறது. அதுதான் கீழடி, பொருநை, இரும்பின் தொன்மை. ‘இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம்’
மண்ணுக்குள்ளும்
ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே
கொண்டு வருவோம்.”
திருமிகு. மு.க.
ஸ்டாலின்,
தி.மு.க.
தலைவர்
“பசுமையான எதிர்காலத்தை உருவாக்க, நாடு முழுவதும் மரம் நடுவதை மக்கள் இயக்கமாக முன்னெடுக்கவேண்டும். ஒவ்வொரு குடும்பமும் பிறந்தநாள், திருமண நாள் விழா, குழந்தை பிறப்பு, மறைந்த பெற்றோரின் நினைவு நாள் உள்ளிட்ட முக்கியமான குடும்ப நிகழ்வுகளை ஒரு மரம் நடுவதன் மூலம் கொண்டாடவேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வும், ‘மரத் திருவிழா’
ஆக மாறவேண்டும். ஆண்டிற்குக் குறைந்தது ஒரு மரமாவது நடுவதுடன், குறைந்தது ஐந்து பேரை இந்த மரம் இயக்கத்தில் இணைக்க ஊக்குவிக்கவேண்டும்.”
திருமிகு. சிவராஜ்சிங்
சௌஹான்,
மத்திய வேளாண்மை அமைச்சர்