news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (03.05.2026)

இறைவனின் இதயம் தீய எண்ணம் கொண்டவர்களிடமோ, ஆணவம் பிடித்தவர்களிடமோ அல்லது தலைக்கனம் உள்ளவர்களிடமோ இருப்பதில்லை; மாறாக, எளியவர்களோடும் தாழ்மையுள்ளவர்களோடும்தான் இருக்கிறது.”

 ஏப்ரல் 14, மா மேசன் (Ma Maison) முதியோர் இல்லச் சந்திப்பு

அமைதி என்பது கடவுள் தரும் அருள்கொடை. அதனை நாம் பெறுவதற்கும் தற்காத்துக்கொள்வதற்கும் இடைவிடாத பொறுமையும், அனைவரின் ஒன்றிணைந்த உழைப்பும் அவசியம்.”

ஏப்ரல் 15,  கேமரூன் அரசு அதிகாரிகளுடன் சந்திப்பு

அநீதி மற்றும் ஊழலுக்கு எதிராக, அறநெறி வழுவாத மற்றும் பொதுநலச் சேவை செய்யும் தலைவர்களை உருவாக்கவேண்டிய கடமை கல்வி நிறுவனங்களுக்கு உண்டு.”

ஏப்ரல் 16, மத்திய ஆப்பிரிக்கக் கத்தோலிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடனான சந்திப்பு

இளைஞர் மற்றவர்களுக்குப் பொருள் சார்ந்த உதவியையும் ஆன்மிக ஊட்டச்சத்தையும் கொண்டு செல்லும் நம்பிக்கையின் கருவிகளாக மாற அழைக்கப்படுகிறார்கள்.”

ஏப்ரல் 17, கேமரூனின் துவாலா திருத்தலத் திருப்பலி மறையுரை

போர் அல்ல; அன்பே வெற்றி பெறவேண்டும். அன்னை மரியாவின் கனிவையும் இறைவனின் ஆசிரையும் உலகிற்குத் தாங்கிச்செல்லும் தூதுவர்களாக நாம் மாறவேண்டும்.”

ஏப்ரல் 19, அங்கோலா - முக்சிமா (Muxima) அன்னை மரியா திருத்தல வழிபாட்டு நிகழ்வு உரை