news-details
தமிழக செய்திகள்
சமூகக் குரல்கள்

நீதித்துறையில் நீதிபதிகள் அதிகம் தேவை. குறைவானவர்களே நீதிமன்றத்தை அணுகும் நிலையிலும் கூட, ஐந்து கோடிக்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. சாமானிய மக்களுக்கு நீதி மிகவும் அவசியம்; சாமானியர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், நமது அமைப்பு தோல்வி அடைந்துவிடும்.”

திருமிகு. ஆர்.வி. ஆர்லேகர், தமிழ்நாடு ஆளுநர்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேசியக் கட்சிகள் எந்தக் காலத்திலும் தேர்தலைத் தனித்துச் சந்திக்க வாய்ப்பு இல்லை. தேசியக் கட்சிகளுக்கு இங்கே இடமில்லை. மாநிலக் கட்சிகளின் மீது அதிகாரம் செலுத்தும் வழக்கம் காங்கிரஸ் கட்சிக்குக் கிடையாது; ஆனால், பா...வின் நிலைப்பாடு முற்றிலும் வேறுபட்டது. மாநிலக் கட்சிகளின் அதிகாரத்தைப் பறித்து, அந்தக் கட்சிகளை அழிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே பா...வின் முக்கியப் பணி.”

மாண்புமிகு . பெரியசாமி, தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்

நினைத்த காரியம் நிறைவேற இலட்சியம்வேண்டும்; வாழ்க்கையில் பெரிய நோக்கம் இருக்கவேண்டும்; இலஞ்சத்தை ஒழிக்கவும் ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்யவும் ..எஸ். ஆகவேண்டும் என்ற இலட்சியம் இருக்கவேண்டும். குறைந்த வயதில் உயர்ந்த பதவியில் அமர குடிமைப் பணித் தேர்வு வாய்ப்பு அளிக்கிறது. ..எஸ். என்பது பதவி அல்ல; பொறுப்பு. பொறுப்பை உணர்ந்து கடமையைச் செய்யவேண்டும். இத்தகைய பொறுப்பான பணியில், பல்வேறு அனுபவங்கள் கிடைக்கும். சவால்கள், சட்டப் பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறமை கிடைக்கும். நான்கு பேருக்கு உதவி செய்தோம் என்ற மகிழ்ச்சி கிடைக்கும். மக்களுக்கு உதவி செய்ய அரசு ஊதியம் தருகிறது.”

திருமிகு செ. சைலேந்திரபாபு .பி.எஸ்., தமிழ்நாடு மேனாள் டி.ஜி.பி.