பேரன்பு கொண்ட பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே...
“பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றவியல் வழக்குகள், சொத்துகள், கடன்கள், கல்வித் தகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகள் பற்றிய தகவல்களைப் பெற ECI-net என்ற தளம் மூலம் அறியலாம். பயனர்கள் ECI-net தேர்தல் நடத்தை (Conduct of Election)
பகுதியின் கீழ் KYC தொகுதியை அணுகலாம். வேட்பாளர்கள் சமர்ப்பித்த முழுமையான உறுதிமொழி பத்திரத்தையும் (படிவம் 26) அவர்கள் ECI-net மூலம்
பதிவிறக்கம் செய்யலாம். ECI-net என்பது உலகின் மிகப்பெரிய சனநாயகத்தின் அனைத்துத் தேர்தல் சேவைகளையும் தடையற்ற ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் உலகின் மிகப்பெரிய தேர்தல் சேவைத் தளமாகும். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 40-க்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் இணைய தளங்களை இது ஒருங்கிணைக்கிறது. ECI-net வாக்காளர்களுக்கு வாக்காளர் பதிவு, வாக்காளர் பட்டியல், தேடல், உங்கள் விண்ணப்பங்களைக் கண்காணித்தல், தேர்தல் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுதல், வாக்குச்சாவடி நிலை, அலுவலருடன் அழைப்பை முன்பதிவு செய்தல், பதிவிறக்கம், வாக்குப்பதிவு போக்குகள் மற்றும் குறைகளைத் தீர்ப்பது போன்ற சேவைகளைப் பாதுகாப்பான ஒரே தளத்தில் வழங்குகிறது.”
இந்தியத் தேர்தல்
ஆணையம்