news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (26.04.2026)

அமைதிக்காக ஏங்கும் இவ்வுலகில் நாம் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கவும், அன்பு மற்றும் மனமாற்றத்தின் தூதர்களாக மாறவும் அழைக்கப்படுகிறோம்.”

ஏப். 12, இறை இரக்க ஞாயிறு வாழ்த்தொலிச் செய்தி

நம்பிக்கையாளர்கள் வழிபாட்டுமுறை மற்றும் ஆன்மிகப் பாரம்பரியங்களைப் பாதுகாக்கவும், அமைதியை மேம்படுத்தவும், அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும், பொதுநிலையினர் நம்பிக்கையில் உறுதிப்படவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.”

ஏப்.10, கல்தேய ஆயர்களின் சந்திப்பு

பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வரும் நல்லெண்ணமே, உலகம் முழுவதும் நிலவும் பிற மோதல்களுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு கருவியாக மாறக்கூடும்.”

ஏப்.8. புதன் பொது மறைக்கல்வி உரை

கண்களை உயர்த்திப் பாருங்கள்என்ற  விருதுவாக்கு, கவலைகளை மறந்து நம் பார்வையை உயர்த்தவும், மேலும் கடவுளின் பிரசன்னத்தைக் கண்டறியவும், மற்றவர்களிடம் திறந்த மனத்தோடு பழகவும் நம்மைத் தூண்டுகிறது.”

ஏப்.7, ஸ்பெயின் நாட்டுத் திருத்தூது இலட்சினை வெளியீடு

ஆட்சி செலுத்தும் மனப்பான்மையைக் கொண்டிருக்காமல், மனம் திறந்த பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே உண்மையான அமைதியைக் கொண்டுவர முடியும்.”

ஏப். 6, பிரான்ஸ் அரசுத் தலைவர்கள் சந்திப்பு