news-details
வத்திக்கான் செய்திகள்
வத்திக்கான் நிர்வாகத்தில் மாற்றங்கள்! மூன்று முக்கியப் பொறுப்புகளில் புதியவர்கள்!

வத்திக்கான் நிர்வாகத்தின் மிக முக்கியமான மூன்று உயர் பதவிகளுக்கான புதிய நியமனங்களை, திருத்தந்தை லியோ அறிவித்துள்ளார். வத்திக்கான் செயலகத்தின் பொது விவகாரங்களுக்கானபதிலாளர்என்ற பொறுப்புமிக்கத் துறைக்குப் பேராயர் பாலோருடெல்லி நியமிக்கப்பட்டுள்ளார். 56 வயதான இவர், இதற்கு முன் கொலம்பியாவிற்கான வத்திக்கான் தூதராகப் பணியாற்றியவர்.  இதற்கு முன் இப்பணியில் இருந்த வெனிசுலா நாட்டைச் சேர்ந்த பேராயர் எட்கர் பென்யா பார்ரா தற்போது இத்தாலிக்கான வத்திக்கான் தூதராக மாற்றப்பட்டுள்ளார். மேலும், நீண்ட காலமாகக் காலியாக இருந்ததிருத்தந்தை இல்லத்தின் தலைவர்என்ற பொறுப்பிற்குப் பேராயர் பீட்டர் ராஜிச் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருத்தந்தையின் தினசரி நிகழ்வுகள் மற்றும் மாளிகை நிர்வாகத்தைக் கவனிப்பார்.