news-details
வத்திக்கான் செய்திகள்
“உயிர்ப்புப் பெருவிழா வெறுப்பை விரட்டி, ஆதிக்கத்தை வீழ்த்துகிறது” - திருத்தந்தை

வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் நடைபெற்ற உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்புத் திருப்பலியின்போது, “ஈஸ்டர் பெருவிழா வெறுப்பை அகற்றி, நல்லிணக்கத்தை வளர்ப்பதோடு, ஆதிக்கச் சக்திகளை வீழ்த்துகிறதுஎன்ற கருத்தைத் திருத்தந்தை லியோ பதிவு செய்தார்.

படைப்பு முதல் மீட்பு வரையிலான புனித வரலாற்றைச் சுட்டிக்காட்டிய அவர், மனிதர்களைப் பிரித்து அழிக்கும் பாவத்தின் கடினத்தன்மைக்கு அனைவரையும் ஒன்றிணைத்து வாழ்வளிக்கும்அன்பின் வல்லமைமூலமே கடவுள் பதிலளிக்கிறார் என்றார். மத்தேயு நற்செய்தியில் விவரிக்கப்பட்டுள்ள இயேசுவின் உயிர்ப்பைக் குறிப்பிட்ட திருத்தந்தை, “மனிதர்களால் உடலைக் கொல்ல முடியும், ஆனால் அன்பின் கடவுள் தரும் நித்திய வாழ்வை எந்தக் கல்லறையாலும் சிறைபிடிக்க முடியாதுஎன்று குறிப்பிட்டார்.