திருப்பலி ஆரம்பமாகுமுன் ஆலயத்தில் நுழையாதிருப்பது
தொடர்வண்டியோ,
பேருந்தோ போய்விட்டபின் - பயணம்
தொடர
முடியாமல் நொந்து கொள்வதற்குச் சமம் - ஏனெனில்
திருப்பலிக்குத்
தாமதமாவது திருநன்மை பெறத் தகுதியிழக்கச் செய்கிறது!
மூவொரு
இறைவன் பெயராலே திருப்பலி துவக்கி,
மனம்
வருந்தி மன்னிப்பு வேண்டி, இறைவார்த்தையையும் கேட்டு
மனம்
உவந்து தம்மையே காணிக்கையாக்கியவர் மட்டுமே
மற்றவரோடு
இணைந்து திருநன்மையும் பெறத் தகுதி பெறுவர்!
இறைவனை
வழிபட வீட்டிலிருந்து கோவிலுக்கு வந்தபின்
இறைவனை
மறந்து கோவிலுக்கு வெளியே நிற்பதை விட
வீட்டிலேயே
இருந்து கொள்வது வீண்செயலாகாது -ஆனால்
வாழும்
வழியை (கட்டளையை) மீறுகிற பாவச் செயலாகிவிடும்!
ஆலய
வளாகத்தில் நின்றுகொண்டு திருப்பலி நேரங்களில்
அடுத்தவர்
மற்றவர் பற்றிய வீண் பேச்சுகளால் – நம்மை
ஆண்டவன்
முன்னிலையில் அருள்பெற முடியாத
அற்பர்களாக்கி
விடாமல் எச்சரிக்கையாயிருப்போம்!
கோவிலில்
முன் இடமிருந்தும் கடைசி இடத்தைத் தேடுவது
கோமகன்
இயேசு நம்மைத் தவிர்க்கச் சொன்னதை மறந்து
கல்யாண
விருந்தில் முதல் இடத்தைத் தேடுவதற்குச் சமம் - அது
கடைசி
இடத்தைத் தான் நமது வாழ்விலும் பெற உதவும்!
கோவிலின்
உள்ளே நுழைந்தபின் -நீங்கள்
கோவிலின்
முன் இருக்கையைத் தேடுங்கள்! - உங்களைக்
கோமகன்
இயேசு வாழ்விலும் முன் இருக்கச் செய்வார்!
கோவில்
ஒரு விளையாட்டு மைதானம் அல்ல; எனவே,
கோல்கீப்பர்
அது இது என அங்கு இடம்
காத்து நிற்பதுபோல்
கோவிலிலும்
அங்கொருவர் இங்காருவராக நிற்பதும்
குழந்தைகளை
அங்குமிங்கும் ஓடவிட்டு அழகு பார்ப்பதும்
கோவிலையே
அவமதிக்கிற அர்த்தமற்ற செயலாவதோடு - கடவுளின்
கோபத்திற்குக்கூட
அவர்கள் ஆளாகவேண்டியிருக்கும்!
ஆலய
வாசலில் நிற்பவர் இன்றைய பரிசேயர்!
ஆனால்
பீடத்தருகில் நிற்பவர் இன்றைய வரிதண்டுபவர்!
ஆண்டவர்
வரிதண்டுபவரோடு விருந்துண்டார்
ஆனால்
சில பரிசேயரோடு அவர் வெகுண்டெழுந்தாரே!
திருநன்மை
பெறுவதோடு திருப்பலி முடிவதில்லை தூக்கிலிட்டுக்கொண்ட
திருத்தூதர்
யூதாஸ்போலத் திருப்பந்தியைவிட்டு வெளியே போகாமல்
நன்றிகூறி
மன்றாடியபின் மூவொரு இறைவன் பெயரால் ஆசிரையும்
நன்றியுடன்
பெற்றுச் செல்வதே நல்ல கிறித்தவரின் அடையாளம்!
“அடிக்கடி என்னிடம் தனியே வந்துபோங்கள்; அமைதியில் ஆலயத்தில்
என்னோடு
உரையாடுங்கள்; அப்போதுதான் பிறர் உங்களை என்முன்
தூக்கி
வரும்போது அன்போடு நான் (இயேசு)
‘உங்களைத் தெரியும்’
எனக் கூறமுடியும்!