news-details
தமிழக செய்திகள்
தேர்தல் எதிரொலி...

பேரன்பு கொண்ட பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே...

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடத்தப்படுவதையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினருக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 234 தொகுதிகளிலும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல்கட்டப் பயிற்சி கடந்த 28, 29-ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில் 3,32,231 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் பணம், மது, போதைப்பொருள் மற்றும் இதர இலவசப் பொருள்கள் சட்டவிரோதமாகக் கொண்டு செல்வதைத் தடுக்கும் பணிகளைத் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் இதுவரை ரூ.296.40 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

திருமிகு. அர்ச்சனா பட்நாயக், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி