news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (19.04.2026)

இறைவேண்டல் மற்றும் சேவை ஆகிய ஆன்மிகப் பணிகளில் விடாமுயற்சியுடன் ஈடுபடுவோம்.”

மார்ச் 30, பெனடிக்டைன் துறவிகள் சந்திப்பு

அருள்பணியாளர்களின் சவால்களைப் புரிந்து, அவர்களுக்கு இறைவேண்டல் மற்றும் பரிவன்புடன் ஆதரவளிப்போம்.”

மார்ச் 31, ஏப்ரல் மாதத்திற்கான இறைவேண்டல் கருத்து

திருமுழுக்குப் பெற்ற பொதுநிலையினர் கிறிஸ்துவின் பணிகளில் பங்கேற்று நற்செய்திக்குச் சாட்சிகளாகத் திகழவேண்டும்.”

ஏப் 01, புதன் மறைக்கல்வி உரை

பாஸ்கா திருவிழிப்பில் கிறிஸ்துவின் உயிர்ப்பை உன்னத ஒளியாகக் கொண்டாடி, அமைதியையும் சமூக ஒன்றிப்பையும் வளர்க்க முற்படுவோம்.”

ஏப் 04, உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்புத் திருப்பலி மறையுரை

கிறிஸ்துவின் உயிர்ப்பு அளிக்கும் புதிய நம்பிக்கையையும் ஒளியையும் கொண்டு, உலக இருளைப் போக்கி, வாழ்வின் சாட்சிகளாகத் திகழ்வோம்.”

ஏப் 05, ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா மறையுரை

உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் உண்மையை நற்செய்தியாகப் பறைசாற்றி, போலிச் செய்திகளை வென்று நம்பிக்கையின் சாட்சிகளாவோம்.”

ஏப் 06, நண்பகல்அல்லேலூயாவாழ்த்தொலிச் செய்தி