news-details
சிறப்புக்கட்டுரை
எங்குச் செல்கிறோம்? என்ன செய்யப் போகிறோம்?

1917 - இடிபட்ட சுவர்போல் கலி வீழ்ந்ததாகப் பாரதி கொண்டாடிய நாள்; பாட்டாளி மக்களின் விடுதலை வேண்டி நடத்தப்பட்ட புரட்சிப் போரின் வெற்றி கிடைத்த தினம்; இரஷ்ய நாட்டைக் கைவசம் வைத்து, கொடுங்கோலாட்சி செய்த சார் மன்னனையும் அவன் ஆட்சிக்குத் துணை நின்ற நிலவுடைமையாளர்களையும் கவிழ்த்தொழித்த ஆண்டு; பொதுவுடைமைச் சமூகம் ஒன்று உருவாக்கப்பட்டதோடு, உலக அரங்கில் ஒரு வல்லரசாகவும் உருவாகி ஏற்றம் பெற்றது என்பதுதான் அண்மைக் காலம் வரையிலான வரலாறு.

புரட்சியில் வெற்றிகண்ட இரஷ்ய அரசுக்குப் புரட்சியாளர் லெனின் தலைமையேற்ற நிலையில், இரஷ்யப் புரட்சிக்குத் துணைநின்ற இளைஞர் அமைப்புகளின் (Youth League) பிரதிநிதிகள் சிலர் புரட்சியாளர் லெனினை அணுகி, “புரட்சி வெற்றி பெற்ற நிலையில், இனி இளைஞர் அமைப்பினரான நாங்கள் செய்ய வேண்டுவது என்ன?” என்ற கேள்வியை எழுப்பினர்லெனின் என்ன பதில் கூறினார் தெரியுமா? புரட்சிக்குத் துணை நின்ற இளைஞர் அமைப்பினருக்கு நன்றி கூறியிருக்கலாம்; வாழ்த்தும் கூறியிருக்கலாம்; இங்கே எழுதப்பெறும் இச்செய்தி இடம்பெறும்Lenin on Youthஎன்ற நூலில், கேள்வி எழுப்பிய இளைஞர்களிடம் அவர் அளித்த பதில்learn’ (‘கற்க) என்பதே.

அவ்விளைஞர்கள், ஏற்கெனவே கற்றறிந்தவர்களாகத்தான் இருந்திருக்கவேண்டும்; எனவேதான்எதைக் கற்க வேண்டும்?’ என்ற கேள்வியை எழுப்பினர். இளைஞர்களை நோக்கிகற்கஎன்று பதிலளித்த லெனின் தொடர்ந்துஇச்சமூகத்தைப் படிஎன்றார். கூடவே இச்சமூகம்  எப்படியுள்ளது என்ற விளக்கமும் தருகிறார்.

ஆட்சி செய்அல்லதுஆட்சி செய்ய வை (Rule or be ruled) எனும்திருடுஅல்லதுதிருடச் செய் (Rob or be robbed) என்பதற்கான விளக்கம் தருகிறார். இரஷ்யாவை ஆண்டு முடித்த கலி அரக்கனை வீழ்த்தி முடிக்கத் துணைநின்ற இளையோர் படைக்கு லெனின் கூறிய வழிகாட்டல் தமிழ்நாட்டின் புதிய ஆளும் தம்பிகளுக்குப் பொருந்துமா?

மேலே லெனின் அவர்களால் சுட்டிக் காட்டப்பட்ட சமூக அமைப்பின் உள்ளடக்கம் ஆழமானது. இன்னும் இந்தியச் சமூகம் பற்றி அறிய விரும்புவோருக்கான பாடமாக லெனின் காட்டிய இப்பகுப்பு (Analysis) பொருந்தும்.

இன்றைய தமிழ்நாட்டு இளையோர் தம் பெருவாரியான எண்ணிக்கையால் அவர்கள் விரும்பிய அரசைத் தெரிவுசெய்துள்ளனர். தெரிவு செய்யும் உரிமையை வழங்கிய சனநாயகத்தை நாம் போற்றுகின்ற வேளை, சனநாயகம் எனும் விழுமியத்தைத் தாங்கிய சனநாயக அரசைக் கொண்டு நடத்தும் சமூக-அரசியல் அறிவை இவ்விளைஞர் பெற்றவர்களா? என்ற கேள்வியைக் கட்டாயமாகக் கேட்க வேண்டியுள்ளது.

புரட்சியின் வெற்றிக்குப் பின்கூட, புரட்சிப் போரில் களமாடிய இளையோருக்குச் சமூகப் பாடம் நிகழ்த்த தேவையிருந்தபோது, ஒரு திரைக்கலைஞன் பின்னே, இரசிக மனப்பான்மையால் கூடிய ஒரு கூட்டம் தேர்தல் சனநாயக வழி ஒரு மாநில அரசை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்கப்போவது பற்றிக் கவலைகொள்ள வேண்டாமா?

இக்கும்பல் அரசியல் ரீதியாகத் தயார் செய்யப்பட்ட ஒன்றல்லஇவர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு குழுவும் அல்ல; யார் இவர்கள்? திடீரென புயலெனக் கிளர்ந்தெழுந்து தேர்தல் மூலம் அரசதிகாரக் கோட்டையைக் கைப்பற்றியுள்ளனர். யார் இவர்கள்? எங்கிருந்து வருகின்றனர்? இவர்களின் சமூக-அரசியல் பின்னணி என்ன? இவர்கள் தன்னெழுச்சியாய் திரண்டெழுந்த சுயம்புகளா? யார் இவர்கள்? எங்கிருந்து வருகின்றனர்?

அண்டை நாட்டு அனுபவங்கள்

தென்னிலங்கையில் எழுந்த இளைஞர் எழுச்சி தன்னிச்சையானது அல்ல. சிங்களப் பேரினவாதம் தமிழ்த் தேசிய இனத்தின் நியாயமான கோரிக்கைகளை நிராகரித்து வந்த நிலையில், ஆயுதம்  தாங்கிய தமிழர் போராட்டத்தை வீழ்த்தி விட்டோம் என்ற மமதையில், சிங்களப் பேரினவாதம் இன ரீதியாக ஓர்மைப்படுத்தப்பட்ட சிங்களவர்களின் ஆதரவைத் தேர்தல் மூலம் பெற்றது. தமிழ் ஈழ அழிப்பு மூலம் பெறப்பட்ட எதேச்சதிகார  அரசின் சுயரூபத்தை அறிந்துகொண்ட இளையோர் படை பேரினவாதக் காவலர்களைத் துரத்தியடித்தது.

தமிழர் அழிப்பு மூலம் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்கலாம் என்று நம்பியிருந்த பேரினவாதிகளைத் துரத்திய இளையோரிடம் ஒரு நோக்கம் இருந்தது. அவர்கள் இலக்கும் தெளிவாக இருந்தது. உள்நாட்டுப் போரினால் நலிவுற்றிருந்த ஒரு சிறிய இலங்கைத் தீவின் இளைஞர் படை தமிழ்நாட்டு இளையோருக்குத் தரும் செய்தி என்ன?

வங்க தேசத்தின் இளைஞர் படை என்ன செய்தது? பாகிஸ்தானின் ஒடுக்குமுறைக்கு எதிராகத் திரண்டெழுந்து, தனிநாடு காணத் தலைமையேற்றவங்க பந்துஎன்று பெருமையோடு போற்றப்பெறும் முஜிபூர் ரஹ்மான் அவர்களின் மகள் இளையோர் போராட்டத்தின் விளைவாக இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். வங்க தேசத்தின் பெரிய தலைவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால், தண்டனை பெற்று ஒளிந்து வாழும் நிலை. திரண்டெழுந்த மக்கள் கூட்டம் புதிய அரசை புதிய தேர்தல்கள் மூலம் நிறுவியுள்ளது.

உலகின்ஒரே இந்து நாடுஎன்று இந்திய மதவாதிகளால் பாராட்டப்பெறும் நேபாள நாட்டில் மக்கள் எழுச்சியால் முடியாட்சி முடிவுக்கு வந்தது. சனநாயகப் பாதையை விரும்பிய மக்களின் ஆசைக்கேற்ப உருவான அரசுகள் மக்கள் எதிர்பார்ப்பில் தோற்றுப்போன நிலையில், நேபாள நாட்டின் இளையோர் தம் தன்னெழுச்சியால், ஆட்சியாளர்கள் துரத்தியடிக்கப்பட்டனர். இளையோர் சக்தியின் விருப்பத்திற்கேற்ப புதிய ஆட்சி அரங்கேறியுள்ளது. நேபாளம் போன்ற பின்தங்கிய நாட்டின் இளையோர் நம் நாட்டு இளையோருக்குத் தரும் பாடம் என்ன?

தமிழ்நாட்டு இளையோர், அரசியல் ஞானம் கிஞ்சித்தும் இல்லாத ஒரு திரைக்கலைஞனைத் தலைவனாக ஏற்று அணிதிரண்டுள்ளனர். அரசியல் அகற்றப்பட்ட ஒரு வெறுங்கூட்டம்மாற்றம்வேண்டி, இவரைத் தெரிவு செய்யப்போகிறதாம். ‘மாற்றம்எனும் பொருள் பொதிந்த சொல் இங்குக் கொச்சைப்படுதலையும் அதன் உள்ளடங்கிய அரசியலைப் புரியாதவர்களிடமும் சிக்கித் திணறுதலையும் பார்க்க முடிகிறது. இவர்கள் முன்வைக்கும் மாற்றம் திராவிடத்திற்கு மாற்றா? திராவிடத்தின் உள்ளடக்கமாம் சமூகநீதிக் கொள்கைகளுக்கு மாற்றாதமிழ்மொழி, தமிழ்க் கலாச்சாரம்  எனும் தனித்துவங்களுக்கு எதிரான மாற்றா?

ஒன்றிய ளும் அரசு நாளும் நடத்திக் கொண்டிருக்கும் மதவாத அரசியலுக்கு எதிராக என்ன மாற்றுக்கருத்தை நடிகரும், அவர் சகாக்களும் முன்வைத்துள்ளனர்? தன் கொள்கை எதிரியாக நீட்டி முழக்கி அறிவிக்கும் அந்த நடிகர், பா...வின் எந்த மக்கள் விரோதக் கொள்கையைத் தோலுரித்துக் காட்டினார்? பாசிசம் எனும் கொடுங்கொள்கையைபாயாசம்என்று கிண்டலடிக்கும் பாசிசத்தின் மொத்த வடிவாம் சங்கப் பரிவாரங்களின்  ஆட்சி முறையைக் கேலி செய்யாத இவர், தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழக அரசினைதீய சக்திஎன்று வசைபாடும் துணிச்சல் இவருக்கு எப்படி வந்தது?

கண்முன்னே தெரியும் தி.மு.. அரசு, இவருக்குத் தீயவர்களால் ஆளப்பெறும் ஆட்சியென்றால், ஒன்றியத்தை ஆளும் பா... ஆட்சி தெய்வீக ஆட்சியா? மதத்தையும் மதக் கடவுளரையும் முன்னிறுத்தி ஆட்சி நடத்தும் பிரதமர் மோடி போலவே, நாளும் ஒரு கோவிலுக்குத் தனி விமானத்தில் பயணித்து வழிபட்டு வரும் இவரும் மத அரசியல்தானே செய்கிறார்!

எச்சரிக்கை! எச்சரிக்கை!

இந்தியாவின் சனநாயக, சமயச் சார்பற்ற அரசியலுக்கு எதிராக முற்றிலும் முரணான வகுப்புவாத அரசியலின் வளர்ச்சியை ஆய்வு செய்த வரலாற்று ஆசிரியர்கள் இதன் காரணத்தை மிகத் தெளிவாக முன்வைத்தனர். இந்திய விடுதலைக்குப் பின் உருவான இந்தியத் தேசிய காங்கிரஸ் ஆட்சி மக்களின் விருப்பங்களைச் சரியாக நிறைவு செய்யாத நிலை; மாநில அளவில் தோன்றிய பிராந்திய கட்சிகளும் போதிய பணிகளைச் செய்யாத நிலையில், சனநாயகத்தில் முக்கியப் பங்குபெறும் கட்சிகள் கொள்கைகளை இழந்து வெற்றுக்கட்சிகளான நிலையில், தேர்தல் களத்தை ஆக்கிரமித்துக் கொண்டவர்கள் அரசியல்வாதியா? அல்லது குற்றவாளிகளா? (Criminals) என்று பிரித்தறிய முடியாத நிலையில், பொதுச்சமூகம் நம்பிக்கை இழந்து, அரசியல் அகற்றப்பட்ட சூழலில் (Depolarization) நேரம் பார்த்துக் கொண்டிருந்த பெரும்பான்மை மதவாதிகள் மேற்படி கட்சி ஆட்சி முறை உருவாக்கியிருந்த அவலங்களுக்கு மருந்தாக மதவாதத்தை அல்லது வகுப்புவாதத்தை முன்வைத்த பெரும்பான்மை மதவாதிகள், மதவாதத்தை மருந்தாக்கினர். இன்றைய மதவாத அரசியலின் உச்சபட்ச வளர்ச்சியில் நம் மக்கள் இதனோடு இணைந்து வாழப் பழகிக்கொண்டனர்.

சனநாயகம், சமயச் சார்பின்மை எனும் பெரு விழுமியங்கள் இன்று மக்களிடம் பேசுபொருளாக (Discourse) இல்லை. இந்து மதம், இந்திய தேசம், இந்து  தேசியம் என்பனவே இன்றைய அரசியல் உரையாடல்கள். இன்று தமிழ்நாட்டு மண்ணில் பெருவாரியானோர் அரசியல் அகற்றப்பட்ட நிலையில் வாழும் இளையோரையும், அவர்தம் உடனடித் தலைவரையும் சங்கப் பரிவாரங்களும் கொள்கை உள்ளீடற்ற நடிகரைக் கபளீகரம் செய்து கொள்ளும் என்பதே உண்மை. சமூகத்தின் எந்தப் பகுதியினரையும் அபகரிக்கும் பண்புடைய சங்கப் பரிவாரங்கள் நடிகர் தலைவரை அபகரிக்கையில், இவர் பின்னே செல்லும் கூட்டமும் அதே வழியைத் தமதாக்கிக்கொள்ளும்.

தமிழ்நாட்டு மக்கள் தேர்தல் மூலம் பா...வை அப்புறப்படுத்தியிருக்கலாம். இந்நச்சு தமிழ்நாட்டில் ஆழமாக வேர் பதித்து வருகிறது. சங்கப் பரிவாரங்கள் மம்தாவை நன்றாகவே வீழ்த்தியுள்ளன. இந்துத்துவத்தின் மாற்றுக்கருத்தியல் என்று போற்றப்பட்ட பொதுவுடைமை வங்க மாநிலத்தில் துடைத்தெறியப்பட்டுவிட்டது.

அரசியல் அறிவு எதுவுமற்ற ஒரு கூட்டம் தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் நிலையில், அரசியல் அகற்றப்பட்ட இக்கூட்டம் மதவாத, பிரிவினைவாத அமைப்புகளிடமிருந்து நம்மை எப்படிக் காப்பாற்றப் போகிறது?