“குருத்துவ அழைப்பு என்பது அனைவரையும் ஒன்றிணைக்கும் பணி. கிறிஸ்துவோடு நாம் கொண்டிருக்கும் ஆழமான உறவு, எல்லா மனிதர்களையும் அன்பு செய்ய நம் இதயத்தைத் தூண்டுகிறது.”
ஏப்ரல் 26, புதிய அருள்பணியாளர்களின் திருநிலைப்பாட்டுத் திருப்பலிச் செய்தி
“உண்மையான ஒற்றுமை என்பது வேறுபாடுகளைக் கடந்து, மனித மாண்பினைப் போற்றி, ஆக்கப்பூர்வமான ஒன்றைக் கட்டியெழுப்புவதாகும்.”
ஏப்ரல் 25, ஐரோப்பிய
மக்கள்
கட்சி
நாடாளுமன்ற
உறுப்பினர்களுடன்
சந்திப்பு
“கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல; அது உண்மையை நேசிக்கும், சுதந்திரத்தை மதிக்கும் மற்றும் சிந்திக்கும் திறன் கொண்ட இதயங்களை உருவாக்கும். இதில்தான் நம்பிக்கையும் அறிவும் இணைந்து செயல்படும்.”
ஏப்ரல் 24, கத்தோலிக்க
ஆசிரியர்களுடன்
சந்திப்பு
“தனிமனிதர்கள் இல்லங்களிலும் சமூகங்களிலும் காட்டும் சிறிய அன்புச் செயல்கள், இருள் சூழ்ந்த சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ‘ஒளியாக’ மாறும்.”
ஏப்ரல் 22, எக்குவடோரியல்
கினியாவின்
பாட்டாவில் இளைஞர்களுடன் சந்திப்பு
“கடவுள் நம்மை நாம் இருக்கும் நிலையிலேயே அன்பு செய்கிறார். நாம் நோயுற்ற நிலையிலேயே முடங்கிவிடாமல், நம் பலவீனங்களைக் குணமாக்கும் அன்புடன் மேம்படவேண்டும் என்பதே அவரது விருப்பம்.”
ஏப்ரல் 21, மலாபோவின்
’ஜீன்
பியர்
ஓலி’மனநல மருத்துவமனை
நோயாளிகளுடன்
சந்திப்பு