news-details
ஆன்மிகம்
கிறிஸ்து பிறப்பு நிகழ்வு இயேசுவுடன் அன்னை மரியாவுக்குள்ள நெருங்கிய தொடர்பைக் காட்டுகிறது! – 36

1. இயேசுவின் பிறப்பு பற்றிய செய்தியில் லூக்கா நற்செய்தியாளர் அந்நிகழ்வின் மறைபொருளை  நன்கு  புரிந்துகொள்ளக்கூடிய வகையில் நமக்கு எடுத்துக் கூறுகிறார்.

முதலில், நற்செய்தியாளர் தாவீதின் வழிமரபினரான யோசேப்புவையும், அவரின் மனைவி மரியாவையும்கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்கு...” (லூக் 2:5) செல்லப் பணித்த அகுஸ்துஸ் சீசரால் ஆணையிடப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

அந்தப் பயணமும் இயேசுவின் பிறப்பும் எத்தகைய சூழலில் நிகழ்ந்தவை என்பதைப் பற்றி நமக்குக் கூறுகையில், நற்செய்தியாளர் லூக்கா மெசியாவின் அரசைப் பற்றிய சில அடிப்படைப் பண்புகளாகிய துன்பம் மற்றும் ஏழ்மை போன்ற சூழ்நிலையோடு நமக்குக் கூறுகின்றார். அதாவது, அவரின் அரசு பற்றி அவரே அவரது பொதுவாழ்வில் கூறுகின்றவாறு, எந்தவிதமான உலகுசார்ந்த மரியாதையோ அல்லது அதிகாரமோ இல்லாததோர் அரசாகும்: “மனுமகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை (லூக் 9:58).

2. இயேசுவின் பிறப்பு பற்றிய நற்செய்தியாளர் லூக்காவின் விவரிப்பானது ஒருசில முக்கியமில்லாத குறிப்புகளைக் கொண்டிருக்கின்றதுஅவை இயேசுவினுடைய பிறப்பின் மறையுண்மைகளையும் மற்றும் இறைமகனைப் பெற்றெடுத்தவரின் உணர்வுகளை நன்றாகப் புரிந்துகொள்ளவும், வாசிப்பவர் களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடும் எழுதப்பட்டிருக்கலாம்.

பிறப்பு பற்றிய விவரிப்பானது சாதாரண முறையில் கூறப்பட்டிருந்தாலும், மரியாவை அவர் மனத்தில் இருத்தித் தியானிப்பவராக மற்றும் கிறிஸ்துவின் மறையுண்மைகளில் மிக நெருக்கமாகப் பங்கெடுப்பவராகப் பதிவுசெய்கின்றது. “அவர்தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத்தொட்டியில் கிடத்தினார்...” (லூக் 2:7). மரியாவின்  இச்செயலானது ஏற்கெனவே கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் பொழுது வெளிப்படுத்தப்பட்டஉம் சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக் 1:38) என்ற வார்த்தைபடி கடவுளின் திட்டத்தில் துணை நிற்பதற்கான அவரின் தீர்க்கமான மனநிலையைக் குறிக்கின்றதொன்றாகவே இருக்கின்றது.

மரியா தனது மகனின் மீட்புப் பணியைப் பகிர்ந்து கொள்கின்றார்

மரியா மகப்பேற்றை ஒரு முழுமையான ஏழ்மை கோலத்தில் அனுபவிக்கின்றார். புதிதாகப் பிறக்கின்ற ஒரு குழந்தைக்குத் தாய்மார்கள் வழக்கமாகக் கொடுக்கின்ற ஒன்றைக்கூட அவரால் இறைமகனுக்குக் கொடுக்க முடியவில்லை. அதற்குப் பதிலாகமிக மிக உயர்ந்தவரின் மகன்என்ற கௌரவத்திற்கு மாறான புதுமையானதொரு தொட்டிலாகியஒரு தீவனத் தொட்டியில்மரியா அவரைக் கிடத்த வேண்டியதாயிற்று.

3. “விடுதியில் அவர்களுக்கு இடமில்லை (லூக் 2:7) என்று லூக்கா நற்செய்தி கூறுகின்றது. இந்த வார்த்தையானது, யோவான் நற்செய்தியின் முகவுரையை நமக்கு நினைவுபடுத்துகின்றது: “அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை (யோவா 1:11). மேலும் இது அவர் தமது பூவுலக வாழ்வின் பொழுது எதிர்கொள்ளப் போகின்ற அநேகப் புறக்கணிப்புகளை முன்னறிவிக்கின்றதொன்றாகவே அமைகின்றது.  “விடுதியில் அவர்களுக்கு இடமில்லை (லூக் 2:7). இங்குஅவர்களுக்குஎன்ற சொல் மகன் மற்றும் தாயை இந்தப் புறக்கணிப்பில் இணைக்கின்றது. மேலும், மரியா எவ்வாறு ஏற்கெனவே அவரது மகனின் பாடுகளோடு இணைக்கப்படுகின்றார் மற்றும் மீட்புப் பணியைப் பகிர்கின்றார் என்பதையும் காட்டுகின்றது.

தமக்குரியவர்களாலேயேபுறக்கணிக்கப்பட்டு ஒன்றும் அறியாதவர்கள், காட்டுமிராண்டிகள் மற்றும் கரடுமுரடானவர்கள் என்று கூறப்பட்ட ஆனால், மெசியாவின் பிறப்பு பற்றிய நற்செய்தியை முதலில் பெற கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட ஆடு மேய்ப்பவர்களால் வரவேற்கப்படுகின்றார். வானதூதர் அவர்களுக்குக் கொடுக்கின்ற செய்தியானது மகிழ்ந்து களிகூர்வதற்கானதோர் அழைப்பாகும். ‘அஞ்சாதீர்கள்என்று சொல்லி அனைத்து பயங்களையும் வெற்றிகொள்ளுங்கள் என்ற அழைப்போடு, “இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் (லூக் 2:10) என்றும் கூறுகின்றார்.

உண்மையில், கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் பொழுது மரியாவுக்கு இருந்ததைப்போலவே மனிதர்களுக்கான கடவுளது நல்லெண்ணத்தின் ஒரு மிகப்பெரிய அடையாளமாகவே இயேசுவின் பிறப்பு, ஆடு மேய்ப்பவர்களுக்கு (இடையர்களுக்கு) அமைகின்றது. பெத்லகேம் குகையின் ஏழ்மையில் தியானிக்கப்படும் தெய்வீக மீட்பரில், மனுக்குலத்தின் நம்பிக்கையாக இருக்கின்ற ஒருவரை நம்பிக்கையோடு எதிர்கொள்வதற்கான ஓர் அழைப்பாக இதை நாம் காணமுடியும்.

வானதூதரின் பாடல்: உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கூறுகின்றது. இதுநல்லெண்ணம் கொண்ட மனிதர்கள் (லூக் 2:14) என்றும் மொழிபெயர்க்கப்படலாம். இப்பாடல் மரியா அவரது பாடலில் (Magnificat) கூறியதை இடையர்களுக்கு வெளிப்படுத்துகிறது. இயேசுவின் பிறப்பு கடவுளின் இரக்கம் நிறைந்த அன்பின் அடையாளமாக இருக்கிறது. அதுவே தாழ்நிலையில் இருந்தோருக்கும் ஏழைகளுக்கும் சிறப்பான விதத்தில் காட்டப்படுகின்றது

4. இடையர்கள் வானதூதரின் அழைத்தலுக்கு ஆர்வத்தோடும் உடனடியாகவும் பதிலளிக்கிறார்கள்: “வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கிற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம் (லூக் 2:15).

அவர்கள் வீணாகத் தேடவில்லை: மேலும் அவர்கள்.... மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள் (லூக் 2:16). அவர்களுக்குத் திருச்சங்கம் நினைவுகூர்வதைப் போன்று, “இறைவனின் தாய் அவரின் தலைச்சன் மகனை மகிழ்ச்சியோடு காண்பித்தாள் (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 57). இதுதான் அவர்களது வாழ்வின் முக்கியமானதொரு தருணமாக இருந்தது.

மரியா இந்த நிகழ்வுகளை அவரது மனத்தில் தியானித்தார்

பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியை...” (லூக் 2:17) தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இடையர்களுக்கு இயல்பாகவே இருந்தது. தாயை அவரது மகனோடு சந்தித்த அந்த அற்புதமான அனுபவத்திற்குப் பிறகு, அந்த இடையர்கள் எல்லாக் காலத்தையும் சார்ந்த நற்செய்தி அறிவிப்பாளர்கள் இயேசுவை நன்கு தெரிந்துகொள்வதற்கும் மற்றும் அவரது மீட்பின் நற்செய்தியை அறிவிக்கின்ற மகிழ்ச்சியான அறிவிப்பாளர்களாக மாறுவதற்கும் உரிய வழிமுறைகளையும், அவர்கள் மரியாவோடு ஆழமான ஆன்மிக உறவு கொண்டிருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், அதன் அவசியத்தையும் பரிந்துரைக்கிறார்கள்.

இத்தகைய வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகளோடு, நற்செய்தியாளர் லூக்காமரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார் (லூக் 2:19) என்று கூறுகின்றார்.

இடையர்கள் பயத்திலிருந்து வியப்பிற்குக் கடந்து சென்றபொழுது, நம்பிக்கையின் காரணமாக மரியா அவரது மகனோடு தொடர்புடைய நிகழ்வுகளின் பதிவுகளை மனத்தில் வைத்திருந்தார். மேலும், அவைகளைப் பற்றி இதயத்தில் அதாவது, அவரது இதயத்தின் ஆழத்தில் தியானித்ததனால் அவைகளைப் பற்றிய அவரின் புரிதலை ஆழப்படுத்தினார்.

இவ்வகையில், மீட்பின் மறைபொருளைச் சிறப்பாக ஏற்றுக்கொள்வதற்கும், அதனை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், அனைத்துக் காலங்களைச் சார்ந்த மக்களிடமும் புதுப்பிக்கப்பட்ட முயற்சியுடன் அதனைப் பறைசாற்றுவதற்கும் ஏதுவாக மற்றொரு தாயான திரு அவையானது தியானம் மற்றும் இறையியல் சிந்தனை ஆகிய கொடையையும் பணியையும் வளர்த்தெடுக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.

மூலம்: Pope John Paul II, Nativity shows Mary’s closeness to Jesus, in «L’Osservatore Romano», 27 Novembre 1996, p.11.