news-details
இந்திய செய்திகள்
தொகுப்பு: ஸ்ரீநிதி

அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகள் பற்றி இளையோருக்கு ஆழமாகக் கற்பிக்கப்படவில்லை. அவரைச் சாதிக் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. அவர் முழு தேசத்திற்கும் சொந்தமானவர். அவரைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிக்கவேண்டும். மாநிலப் பாடத்திட்டத்தில் மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடத்தில், இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் ஆற்றிய பங்கு, நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய அரசமைப்புத் தொலைநோக்குப் பார்வைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு, சுதந்திரப் போராட்ட இயக்கத்திலும் சனநாயக தேசத்தைக் கட்டமைப்பதிலும் அவர் ஆற்றிய பங்கு, பொருளாதாரம், சட்டம் மற்றும் சமூக சிந்தனை ஆகிய துறைகளில் அவர் ஆற்றிய கல்விசார் சாதனைகள் ஆகிய தலைப்புகளில் பாடங்களைக் கற்பிக்கவேண்டும். இந்தப் பாடத்திட்டத்தை 2027-2028 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த அரசு முன்வரவேண்டும்.”

நீதிபதி. எல். விக்டோரியா கௌரி, உயர் நீதிமன்றம்

“2014-ஆம் ஆண்டு முதல் உலகப் பத்திரிகை சுதந்திரப் பட்டியலில் இந்தியா பின்தங்கி வருகிறது. பா... ஆட்சியில் இந்தியா 157-வது இடத்திற்குச் சென்றுவிட்டது. சுதந்திரமான பத்திரிகையாளர்கள் என்பது அரசு சொல்வதை அப்படியே கேட்பதோ அல்லது அரசின் தோல்விகளை மூடி மறைப்பதோ கிடையாது. அரசு அதிகாரிகளைக் கேள்வி கேட்பதும், அரசின் அதிகாரங்களை ஆய்வு செய்வதும், தோல்விக்கு அரசு அதிகாரிகளைப் பொறுப்பேற்கச் செய்வதுமே பத்திரிகை சுதந்திரமாகும். ஆட்சி அதிகாரத்தில் இருப்போருக்கும், மக்களுக்கும் இடையேயான சனநாயகத்தை ஊடகம் காக்கவேண்டும். பொதுமக்களின் நலனைச் செய்தியாளர்கள் காக்கவேண்டும். செய்தியாளர்களைச் சட்டரீதியில் மௌனமாக்கும் வேலைகளைச் சங்க் பரிவார் அமைப்புகள் அதிகரித்து வருகின்றன. அவதூறு சட்டங்கள், தேசப் பாதுகாப்புச் சட்டப்பிரிவுகள் உள்ளிட்டவை நீதிக்கான கருவியாக மட்டும் பயன்படுத்தப்படாமல், மிரட்டுவதற்கான கருவியாகவும் பயன்படுத்தப்படுகின்றன.”

திருமிகு. மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சித் தலைவர்

.. வருகையால் இந்தியாவுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான சவால் உருவாகியுள்ளது. ஆதலால் .. தொழில்நுட்பத்துடன் போட்டியிடும் வகையில் தகவல் தொழில்நுட்பத்துறை மாற்றப்படுவதையும், ..யிடம் வேலைவாய்ப்புகளை இழக்காததையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், தகவல் தொழில்நுட்பத் துறைக்குள்ளும், பிற சேவைத் துறைகளிலும் ..யைப் பயன்படுத்தும் வகையில் நாம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.”

திருமிகு. அனந்த நாகேஸ்வரன், தலைமைப் பொருளாதார ஆலோசகர்