news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (17.05.2026)

குருத்துவ அழைப்பு அனைவரையும் ஒன்றிணைக்கும் பணி; அது நாம் கிறிஸ்துவோடு கொண்டிருக்கும் ஆழமான உறவை, எல்லா மனிதர்களையும் அன்பு செய்ய நம் இதயத்தைத் தூண்டுகிறது.”

ஏப்ரல் 27, புதிய அருள்பணியாளர்களின் திருநிலைப்பாட்டுத் திருப்பலி

கல்விசார் பாடத்திட்ட மாற்றங்களைவிட, ஒரு குருவின் உள்ளத்தில் ஏற்படும் தொடர்ச்சியான மனமாற்றமேமுக்கியம்; மேலும், பணிவு, கனிவு, பிறருக்குச் செவிமடுத்தல் போன்றவை குருத்துவப் பணியின் அடிப்படைப் பண்புகளாக இருக்கவேண்டும்.”

ஏப்ரல் 28, திருப்பீடத் தூதரகக் கல்வி நிறுவனத்தின் 325-வது ஆண்டு நிறைவுச் செய்தி

தனது சாட்சிய வாழ்வின் மூலமாகவும், இறைவார்த்தையைத் துணிச்சலுடன் அறிவிப்பதன் மூலமாகவும், அனைவரின் உரிமைகளையும் அங்கீகரிக்கச் செய்வதும், அந்த உரிமைகள் மதிக்கப்படுவதை உறுதிசெய்வதும் திரு அவையின் பொறுப்பாகும்.”

ஏப்ரல் 29 , புதன் பொது மறைக்கல்வி உரை

உலகின் வாழ்விற்காகப் பிட்கப்பட்ட அப்பமான இயேசுவைப் போல, நீதிக்காகப் பசியும், சகோதரத்துவத்திற்காகத் தாகமும் கொண்ட இதயத்தைப் பெறவேண்டும்.”

ஏப்ரல் 30, மே மாதத்திற்கான திருத்தந்தையின் இறைவேண்டல்

நாம் கிறிஸ்துவை நெருங்கிச் செல்லும்போது, ஒருவருக்கொருவர் நெருக்கமாகவும், நமது ஒற்றுமையில் ஆழமாகவும் வளர்கிறோம் என்றும், இந்த மறைபொருள் நம்மை மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்தையுமே உருமாற்றுகிறது.”

மே 02, துணை ஆயர்கள் திருநிலைப்பாட்டுத் திருப்பலி