news-details
சிறப்புக்கட்டுரை
“வாசிப்பை நேசிப்போம்” – திருத்தந்தை

புத்தகங்கள் மற்றும் வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி திருத்தந்தை லியோ அவர்கள் மிக  அருமையான கருத்துகளை முன்வைத்துள்ளார்.

புத்தகங்கள் சிந்திப்பதற்கான வாய்ப்பை வழங்குகின்றன; டிஜிட்டல் யுகத்தில் நல்ல வாசிப்பே ஆழ்ந்த சிந்தனை, ஆய்வு மனப்பான்மை, விமர்சனப் பார்வை ஆகியவற்றை மேம்படுத்தும். நல்ல புத்தக வாசிப்பு அறிவை வளர்ப்பதோடு, ஒருதலைப்பட்சக் கருத்துகள் மற்றும் எதிர்மறை எண்ணங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. குறுகிய மனநிலையிலிருந்து விடுபட வாசிப்பு ஒரு மாமருந்து.

புத்தகங்கள் மற்றவர்களை, சமூகத்தைச் சந்திப்பதற்கான களமாக அமைகின்றன. எண்ணங்களும் கருத்துகளும் அனுபவங்களும்  பகிரப்படுவதன் மூலம் வாசகர்கள் நூல் ஆசிரியருடனும், நூலாசிரியர் வாசகர்களுடனும் கருத்துப் பரிமாற்றம் செய்கிறார்கள்.

திருத்தந்தை பிரான்சிஸ் கூறியது போல, புத்தக வாசிப்பால் சந்திப்பு கலாச்சாரம் மேம்படும். புத்தகங்கள் மக்களிடையே பாலங்களை உருவாக்கவும், உரையாடலை ஊக்குவிக்கவும், புரிந்துணர்வை விரிவுபடுத்தவும் உதவும்.

புத்தகங்கள் நற்செய்தி அறிவிப்பதற்கான ஒரு வழியாகவும் இருக்கிறது. ஆன்மிக எழுத்துகள், நம்பிக்கை தரும் சிந்தனைகள், புனிதர்களின் வரலாறுகள் மனித இதயத்தை ஆழமாகத் தொடக்கூடியவை.

எனவே, நற்செய்திப் பணியில் ஈடுபட்டிருப்போர் சிறந்த புத்தக வாசிப்பாளர்களாக இருக்கவேண்டும்.

புத்தகம், நூலகம், வாசிப்புக் கலாச்சாரம் போன்றவற்றிற்கு நம் குடும்பங்களில், பங்கில், கல்வி நிறுவனங்களில் எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கிறோம்?

ஆகவே,

வாசிப்பை நேசிப்போம்,

வாசிப்பால் உயர்வோம்.”