news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (31.05.2026)

ஒவ்வொரு மனிதனின் உன்னத மதிப்பையும், பாதிக்கப்படக்கூடிய மக்களின் மாண்பையும் மக்கள் உணர்ந்து கொள்வதற்கு, இலக்கியம் ஒரு முக்கியக் கருவியாக அமையவேண்டும்.”

மே 13, 38-வது தூரின் பன்னாட்டு புத்தகக் கண்காட்சியின் வாழ்த்துச் செய்தி

சட்டத்தின் ஆட்சி, குற்றத் தடுப்பு மற்றும் குற்றவியல் நீதி ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். மேலும், ஓர் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கு இந்தக் கூறுகள் அத்தியாவசியமானவை.”

மே 14, போதைப்பொருளுக்கு எதிரான மாநாட்டில் பங்கேற்றவர்களுடன் சந்திப்பு

உறுதிப்பூசுதல் வழியாகப் பெறும் தூய ஆவியின் ஆற்றல், இளையோருக்கு நம்பிக்கையின் பாதையில் நடக்கும் துணிவைத் தருகிறது.”

மே 15, ஜெனோவா இளைஞர்களுடன் சந்திப்புச் செய்தி

பொருளாதாரச் செயல்பாடுகள் மனிதகுலத்திற்குத் தொண்டு செய்வதாகவும்; தாராளத்தன்மை, நீதி மற்றும் பொறுப்புணர்வுடன் படைப்பைப் பராமரிக்க கடவுள் விடுத்த அழைப்பைப் பிரதிபலிக்க வேண்டும்.”

மே 16, வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களின் சந்திப்புச் செய்தி

விண்ணேற்றம் என்பது ஒரு வரலாற்றுச் செய்தி மட்டுமல்ல; அது நம்பிக்கையாளர்களை இயேசுவோடு ஒன்றிணைக்கும் ஒரு வாழும் மறைபொருள்.”                      

மே 17, ‘அல்லேலுயாவாழ்த்துச் செய்தி