நற்பேறுபெற்றவர் யார்? (திபா 1:1)
அவர்
பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;
பாவிகளின்
தீயவழி நில்லாதவர்;
இகழ்வாரின்
குழுவினில்
அமராதவர்!
அன்புத்
தந்தையே,
நற்பேறு
பெற்றவராகிடவேண்டும்
மூன்று
நிபந்தனைகள்!
ஊதாரி
மகனோ,
பொல்லாரின்
சொல்லின்படி நடந்தான்,
பாவிகளின்
தீயவழி நின்றான்,
இகழ்வாரின்
குழுவில் அமர்ந்தான், நடந்தான், நின்றான், அமர்ந்தான்.
முடிவு
பன்றிக் கூடாரமாயிற்று! (லூக் 15: 13-16)
மூன்று ஆலோசனைகள்
பொன்னானவை;
நல்லாரின்
சொல்படி நடக்கவேண்டும்,
• நடப்பதற்கான அடிச்சுவடுகளை
இயேசு
விட்டுச் சென்றுள்ளார் (1 பேது 2:21).
• மறு கிறிஸ்துவாக
வாழ்ந்த
புனிதர்கள்
(கலா
2:20, எபி 13:7)
வாழ்வின்
நிறைவை
மகுடமாய்த்
தந்துள்ளனர்
(1கொரி
11:1; பிலி 3:17).
• நல்ல மனச்சான்றின் வழியாக
தூய
ஆவியார் போதிக்கிறார்.
“இதுதான்
வழி;
இதிலேயே
நடந்து செல்” (எசா
30:21)
போதகராக
அறிவுறுத்துகிறார்!
நன்றி
தந்தையே!
தூயோரின்
நல்வழியில்
நிற்கவேண்டும்.
பாவத்திற்கு
எதிரான
நல்லாருடன்
நீதி,
சமத்துவத்திற்குச் சார்பான
போராளிகளுடன்
சாதி, மதம்,
இனம்,
மொழி கடந்து (யாக் 4:7)
குரல்
கொடுப்பவருடன்
நிற்கவேண்டும்
(எசா 1:16-19).
நற்செய்தியாக
வாழ்பவருடன்
கரம்
கோர்க்கவேண்டும்.
கரங்களை
இணைப்பதற்காக
நன்றி
தந்தையே!
இறைப்புகழ்
மனிதரோடு
அமரவேண்டும்.
முணுமுணுப்பவர்களிடமோ
அவநம்பிக்கை
மனிதரிடமோ
தோழமை
கூடவே கூடாது.
அது
தொற்றுநோய்
எம்மைத்
தீண்டவிடக்கூடாது.
‘என்ன
நேரிடினும் நன்றி’
(1தெச
5:18) என்று எப்போதும்
இறைப்புகழ்
பாடுபவர்
தோழர்களாகிட
வேண்டும்
(திபா 34:1-5).
தூய
தோழர்களைத்
தருவதற்காக
நன்றி
தந்தையே! (திபா 119:63).
யாரோடு
நடக்க, நிற்க,
அமரவேண்டும்?
புரிந்து
கொண்டோம் தந்தையே!
உலகம்
பாவத்துள் கிடக்கிறது (தொநூ 6:5).
உலகில்
வாழ்ந்தாலும்
யாம்
உலகத்திற்குரியவரல்லர்
(யோவா 17:16).
விண்ணில்
உம்மோடு
இருப்பவர்கள்
(எபே 2:6).
விண்ணக
வாசனையுடன்
வாழ்ந்திட
வரம் தாரும்
தந்தையே!