news-details
தமிழக செய்திகள்
தமிழுக்கு மூன்றாமிடம்: முதல்வர் பதவியேற்பும் மீறப்பட்ட ‘தமிழ்’ மரபும்

முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதைப் பார்த்து, தமிழ் உணர்வாளர்களின் நெஞ்சு கொதிக்கிறது. இதுபோன்ற அவலங்கள் மீண்டும் தொடராது இருக்க, முதல்வர் வழிவகை காணவேண்டும்.”

திரு. கி. வீரமணி, தி..தலைவர்

மாற்றம் என்று கூறிக்கொண்டு தமிழுக்கு முக்கியத்துவம் தராமல் இருப்பது அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்லும். மேனாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், செயலலிதா, கருணாநிதி காலத்திலும்கூட இவ்வாறான செயல் நடைபெறவில்லை. தற்போதைய ஆட்சியின் மூலம் தமிழ்மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து போன்று தமிழ்நாடும் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்படும்.”

திரு. R.S. பாரதி, தி.மு.. அமைப்புச் செயலாளர்

பதவியேற்பு விழாவில் நீண்டகால மரபு மீறப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ‘வந்தே மாதரம்பாடலை முதலாவதாகவும், தேசிய கீதத்தை இரண்டாவதாகவும் இசைத்த பின்னரே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டுள்ளது. இது அதிகாரிகளின் கவனக் குறைவா அல்லது ஆளுநரை மகிழ்விக்கச் செய்யப்பட்டதா என்பதற்கு முதல்வர் விளக்கமளிக்கவேண்டும்.”

திருதொல். திருமாவளவன் வி.சி.. தலைவர்

முதல்வர் பதவியேற்பு நிகழ்வில்வந்தே மாதரம்பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாம் நிலையில் வைத்தது மரபு மீறிய செயலாகும். இந்தத் தவறு மீண்டும் தொடரக்கூடாது.”

திரு. இராமதாஸ், பா... நிறுவனர்

முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்பட்டதில் .வெ.. தலைமையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசிற்கும் உடன்பாடு இல்லை. தாய்த் தமிழ்நாட்டில் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாடுவது என்பது நீண்டகால மரபு. நாங்கள் இது தொடர்பாக ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கைப்படி செயல்பட வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் மூன்றாவதாக ஒலிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது.”

திரு. ஆதவ் அர்ஜூனா, அமைச்சர்