news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

தென்மேற்கு பருவமழை தொடங்கவிருக்கும் இச்சூழலில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாலும், காரீப் பருவத்தில் அதிகபட்ச பரப்பில் பயிர் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ள நிலையில், யூரியா மற்றும் டி..பி. உரங்களின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இத்தருணத்தில் உரப்பற்றாக்குறை ஏற்பட்டால் மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. பல்வேறு சாதகமான காரணிகளால் நடப்பு காரீப் பருவத்தில் பயிர் சாகுபடியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் யூரியா, டி..பி. போன்ற நேரடி உரங்களின் தேவை எதிர்வரும் நாள்களில் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை நிறைவு செய்திட 3.83 இலட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.05 இலட்சம் மெட்ரிக் டன் டி..பி. மற்றும் 0.83 இலட்சம் மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகியவற்றை உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்குவதை ஒன்றிய அரசு உறுதி செய்யவேண்டும்.”

மாண்புமிகு. . ஜோசப் விஜய், முதல்வர், தமிழ்நாடு அரசு

இந்தியாவின் பொருளாதார அமைப்பை அம்பானி, அதானி மற்றும் அமெரிக்காவிடம் மோடி ஒப்படைத்துவிட்டார். இப்போது ஒரு பொருளாதாரப் புயல் வரவிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியாலும் இந்திய அரசாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது. பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அரசமைப்பை அழித்துவிட்டார்கள். வரும் காலங்கள் மிகவும் கடினமாக இருக்கப் போகின்றன. முன்னெப்போதும் இல்லாத கடுமையான பணவீக்கம் நாட்டில் ஏற்படப்போகிறது. அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயரும். நாட்டில் உரப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாவார்கள். எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் நின்றுபோகும்.” 

திருமிகு. இராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்

சமூக, பொருளாதார, தனிநபர் காரணங்களுக்காகப் பள்ளிக்கு வராவிட்டால் உடனே அந்த மாணவரின் வீட்டிற்கே சென்று பள்ளிக்கு வரவைக்க முயற்சி மேற்கொள்வோம். மெல்லக் கற்கும் மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் கடந்த காலங்களில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தொடரும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நாம் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியாது. ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் குறித்து நீதிமன்றத்தில் சில வழக்குகள் உள்ளன. இந்தப் பிரச்சினைக்கு நல்ல வழி பிறக்கும். பொதுத்தேர்வுகளில் வட மாவட்டங்களில் தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்கும் விதமாகக் கல்விப் பணிகள் தீவிரப்படுத்தப்படும்.”

திருமிகு. ராஜ்மோகன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்