வத்திக்கான் தூதரகக் கல்விக் கழகத்தின் 325-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அங்கு வருகை புரிந்த திருத்தந்தை லியோ, திரு அவைத் தூதரக அதிகாரிகளின் சிறப்பான பணிகளைப் பாராட்டினார். அவர்களிடம், “தூதரகப் பணியில் ஈடுபடும் குருக்கள், வெறும் கத்தோலிக்கச் சமூகத்திற்காக மட்டும் உழைக்காமல், ஒட்டுமொத்த மனிதக் குடும்பத்தின் அமைதி, உண்மை மற்றும் நீதிக்காகக் குரல் கொடுக்கவேண்டும்” என்று வலியுறுத்தினார். “வரலாற்றின் சுவடுகளுக்குள் இறைவனின் அருளைக் கொண்டு செல்லும் பாலங்களாகவும், கால்வாய்களாகவும் நீங்கள் இருக்கவேண்டும்” என்று குறிப்பிட்ட திருத்தந்தை, “உலகளாவிய உறவுகளில் மொழியறிவு மற்றும் அரசியல் ஞானத்தை விட ‘மனமாற்றம்’ மற்றும் எளிமை மிக முக்கியம்” என்றார்.