‘புகழ் அனைத்தும் உமதே’(Laudato Si) வாரத்தை முன்னிட்டு திருத்தந்தை லியோ ஆற்றிய உரையில், அமைதியும் படைப்பினைப் பாதுகாப்பதும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று வலியுறுத்தியுள்ளார். மே 17 முதல் 24 வரை நடைபெறும் இந்த வாராந்திர நிகழ்வு, நமது பொதுவான இல்லமாகிய பூமியைப் பாதுகாப்பதற்கான திருத்தந்தை பிரான்சிஸின் சுற்றுமடலை நினைவுபடுத்துகிறது.
அசிசி
புனித பிரான்சிஸின் 800-வது நினைவு ஆண்டைக் குறிப்பிட்ட திருத்தந்தை, கடவுளோடும் சகமனிதர்களோடும் அனைத்துப் படைப்புகளோடும் அமைதியைப் பேணவேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார். அண்மைக் காலங்களில் நடைபெறும் போர்கள், இயற்கையைப் பாதுகாப்பதற்கான பணிகளைப் பெருமளவு பின்தங்கச் செய்துள்ளதாக அவர் கவலை தெரிவித்தார். ‘அமைதிக்கான அக்கறை என்பது வாழ்விற்கான அக்கறை’ என்று குறிப்பிட்ட திருத்தந்தை லியோ, ஒருங்கிணைந்த சூழலியலுக்காக உழைப்பவர்கள் தங்களின் அர்ப்பணிப்பை மீண்டும் புதுப்பிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.