news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (24.05.2026)

இன்றைய உலகிற்கு அமைதி மிகவும் அவசியம். அந்த அமைதி என்பது ஆயுதங்களால் உருவாவதல்ல; மாறாக, இறைநம்பிக்கையாலும் தூய ஆவியின் வழிநடத்துதலாலும் மட்டுமே சாத்தியம்.”

மே 11, வத்திக்கான் - கேப் வெர்டே 50 ஆண்டுகால உறவின் பொன்விழாச் செய்தி

இரக்கம் என்பது நாம் விரும்பினால் செய்யக்கூடிய ஒன்று அல்ல; மாறாக, நமது அன்றாட வாழ்வில் இறைவனின் நற்குணத்தைப் பிரதிபலிப்பதற்கான ஒரு தெய்வீக அழைப்பு.”

மே 10, சமயங்களுக்கிடையிலான உரையாடலுக்கான 8-வது கருத்தரங்கு செய்தி

அமைதியை நிலைநாட்ட நீதி அவசியம். வேலை மற்றும் அன்றாட வாழ்க்கை ஆகிய இரண்டிலும் சுற்றுச்சூழலுக்கான நிலையான மற்றும் நியாயமான பாதுகாப்பை மேம்படுத்தவேண்டும்.”

மே 9, ஈடித் ஹேபர்லேண்ட்-வாக்னர், அகுஸ்தினியர்-பிராவ் நிறுவனத்தின் உறுப்பினர்களின் சந்திப்பு

உலகியல் அதிகாரங்களோ அல்லது ஆயுதங்களோ உண்மையான அமைதியைத் தர இயலாது. இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய தெய்வீக அன்பினால் மட்டுமே போர் மற்றும் வெறுப்புக்குத் தீர்வு காணமுடியும்.”

மே 08, வெள்ளியன்று, பொம்பெயி நகர் திருப்பலிச் செய்தி

வாசிப்பு நம் அறிவை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், தீவிரவாத எண்ணங்களிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது. மேலும், வாசிப்பு என்பது குறுகிய மனப்பான்மைக்கு ஒரு மாமருந்து.”

மே 07, வத்திக்கான் பதிப்பகத்தின் நூற்றாண்டு விழாச் செய்தி