செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்தில் மனித மாண்பைப் பாதுகாப்பது குறித்து திருத்தந்தை 14-ஆம் லியோ எழுதியுள்ள ‘Magnifica humanitas’ (மாண்புமிகு மனிதநேயம்) என்ற அவரது முதல் வரலாற்றுச் சிறப்புமிக்கச் சுற்றுமடல் மே 25 அன்று வெளியிடப்படவுள்ளது.
தொழில்புரட்சியின்போது
தொழிலாளர் நலனுக்காகத் திருத்தந்தை 13-ஆம் லியோ வெளியிட்ட ‘Rerum Novarum’சுற்றுமடலின் 135-ஆம் ஆண்டு நினைவாக இப்புதிய ஆவணத்தில் திருத்தந்தை 14-ஆம் லியோ மே 15-ஆம் தேதியிட்டு கையெழுத்திட்டுள்ளார். மே 25 காலை 11:30 மணிக்கு வத்திக்கான் சினட் மண்டபத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் திருத்தந்தை நேரடியாகப் பங்கேற்பார்.
இந்நிகழ்வில்
கர்தினால்கள் விக்டர் மானுவல் பெர்னாண்டஸ் மற்றும் மைக்கேல் செர்னி ஆகியோருடன் ‘ஆந்த்ரோபிக்’ (Anthropic) நிறுவனத்தின் இணை நிறுவுனர் கிறிஸ்டோபர் ஓலா மற்றும் புகழ்பெற்ற பேராசிரியர்களும் உரையாற்றவுள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சி மனித அடையாளங்களைச் சிதைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை இச்சுற்றுமடல் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்தினால் பியெட்ரோ பரோலின் நிறைவுரைக்குப்பின், திருத்தந்தை லியோ தனது சிறப்புரை மற்றும் ஆசிரை வழங்கவுள்ளார்.