“உயர் சிறப்பு மருத்துவ இடங்களைப் பாதுகாக்க உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வை அரசு அணுகவேண்டும். தமிழ்நாட்டின் இடங்கள் பறிபோனால், இங்கு நோயாளிகளுக்கு உயர் சிறப்புச் சிகிச்சையளிக்கப் போதிய மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். 50% ஒதுக்கீட்டின் கீழ் இடங்கள் பெறும் மருத்துவர்கள், தங்களது பணி ஓய்வுக் காலம்வரை அரசுப் பணியில் தொடர்வோம் என ஒப்பந்தம் (பாண்ட்) மேற்கொள்கின்றனர். இது மாநிலத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, அரசு மருத்துவமனைகளில் உயர் சிறப்புச் சிகிச்சைகள் கிடைப்பதையும் உறுதிசெய்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய பணியிடங்களை உருவாக்காததால், மருத்துவர்கள் உயர் சிறப்புப் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டுவதில்லை. அதன் காரணமாகவே கலந்தாய்வில் இடங்கள் முழுமையாக நிரம்புவதில்லை.”
அரசு மருத்துவர்
சங்கம்
“தமிழ்நாட்டின் வனப் பகுதிகளுக்குள் குறிப்பாக, மேகமலை வனவிலங்கு சரணாலயத்திற்குள்ளும், பொதுவாக அகத்தியமலை உயிர்க் கோளத்திற்குள்ளும் சட்டவிரோத உள்கட்டமைப்புப் பணிகளை அனுமதித்த அனைத்து அலுவலர்கள், அதிகாரிகள் மற்றும் துறைத் தலைவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை, தண்டனை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். வனப் பகுதிகளுக்குள் அமைந்துள்ள அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத உள்கட்டமைப்புகள் ஆறு மாதங்களுக்குள் அகற்றப்படவேண்டும். நீதிமன்ற அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யத் தவறினால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொள்வதற்கு உதவுவதற்காகத் துணை இராணுவப் படைகளை நிலைநிறுத்த சி.இ.சி.
பரிந்துரைக்கலாம்.”
உச்ச நீதிமன்ற
நீதிபதிகள்
விக்ரம்
நாத்,
சந்தீப்
மேத்தா
ஆகியோர்
அடங்கிய
அமர்வு
“தேர்தலில்
60 ஆண்டுகளாக இருந்த சாதி, மதம், காசு கொடுத்து வாக்கு வாங்குவதை உடைத்துள்ளோம். த.வெ.க.
ஆட்சி பாகுபாடின்றி அனைவருக்குமான ஆட்சியாக இருக்கும். மதச்சார்பற்ற கொள்கையில் எந்தவித சமரசமும் கிடையாது. மாநிலத்தின் உரிமைகளை விட்டுத் தரமாட்டோம். நதிநீர் உரிமைகளை, சமூக நீதி, சமத்துவ நீதியை விட்டுக்கொடுக்க மாட்டோம். ஊழலற்ற, இலஞ்சமற்ற ஆட்சியைக் கொடுப்பேன். ஒரே நாளில் நடக்காதுதான். ஒரு நாள் அதை நடக்க வைப்பேன்.”
திருமிகு. ஜோசப்
விஜய்,
முதல்வர், தமிழ்நாடு அரசு