“நாட்டின் மதிப்புமிக்க அரசியல் தலைவராக வாழ்ந்து மறைந்த மேனாள் முதல்வர் கருணாநிதியின் கண்ணியத்தைச் சிதைத்து, அவமதிக்கும் முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அவரது உருவப்படத்தை மிக மோசமாகச் சித்தரித்து சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த அநாகரிகமான பதிவைக் கண்டவர்கள் எவரும் கண்டனம் தெரிவிக்காமல் இருக்கமுடியாது. அறிவியல் தொழில்நுட்பத்தின் நிகழ்கால உச்சமாக வளர்ந்திருப்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாகும். இதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தடுப்பது எப்படி? என்ற வினாவிற்கு விடைதேடி, உலக நாடுகளும் அறிஞர்களும் விவாதித்து வருகின்றனர். அநாகரிகமான குற்றங்கள் நேரும்போது, சமூகம் ஒட்டுமொத்தமாக இணைந்து கண்டிக்கவேண்டும்.”
திருமிகு. மு.
வீரபாண்டியன்,
இந்தியக்
கம்யூனிஸ்ட்
கட்சிப்
பொதுச்
செயலர்
“99 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளை வைத்துதான் இட ஒதுக்கீட்டை அரசு
வழங்கி வருகிறது. இந்தப் பழைய தரவுகள் போதுமானதாக இல்லை. இதை உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் ஏற்கவில்லை. எனவே, தமிழ்நாட்டில் புதிதாகச் சாதிவாரிக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்தவேண்டும். சாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசு நடத்தினால்தான் தமிழ்நாட்டில் உள்ள இரண்டே கால் கோடி குடும்பங்களின் சமூக, பொருளாதார, கல்வி குறித்த துல்லியமான நிலையைக் கண்டறியலாம்.”
திருமிகு. அன்புமணி, பா.ம.க.
தலைவர்
“தமிழ்நாட்டில் நிகழும் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கத் தனி சிறப்புச்சட்டம் கொண்டுவர வேண்டியது அவசியம். பழங்குடியினருக்கு மேற்கொள்ளப்பட்ட சமூக - பொருளாதாரக் கணக்கெடுப்பைப்போல, ஆதிதிராவிடர் மக்களுக்கும் கணக்கெடுப்பு நடத்தவேண்டும். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவேண்டும்.”
திருமிகு. வன்னியரசு,
சமூக நீதித்துறை அமைச்சர்