சமுதாய நலனுக்காகத் தன்னார்வத்துடன் தொண்டாற்றும் இளையோரை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயதிற்குட்பட்ட தலா 3 ஆண், 3 மகளிருக்கு ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுடன் ரூ.1 இலட்சம் ரொக்கமும், பாராட்டுப் பத்திரமும் பதக்கமும் வழங்கப்படும். அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான விருதுகள் வரும் ஆகஸ்டு 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளன.
விண்ணப்பதாரர்கள்
15 முதல் 35 வயதிற்குட்பட்டவராகவும், தமிழ்நாட்டில் ஐந்து ஆண்டுகள் குடியிருந்தவராகவும், சமுதாய நலனுக்காகத் தன்னார்வத்துடன் தொண்டாற்றியவராகவும் இருக்கவேண்டும். கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சமூகச் சேவைகள் மட்டுமே விருதிற்குக் கருத்தில் கொள்ளப்படும். மத்திய - மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்க இயலாது.
கூடுதல் விவரங்களுக்கு...
தகுதியுள்ள
நபர்கள் பிறப்புச் சான்று, அடையாள அட்டை நகல், இருப்பிடச் சான்று, காவல்துறையிடமிருந்து பெறப்படும் தடையின்மை சான்று மற்றும் சமூகப் பணிகள் செய்ததற்கான ஆதாரங்கள் போன்றவற்றுடன் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். பின் தங்களது சாதனை பற்றிய பத்திரிகைச் செய்திகள் மற்றும் சான்றிதழ்களை மூன்று புத்தகங்களாகத் தயார்செய்து, மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 74017 03480 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.