news-details
தமிழக செய்திகள்
புகைப்படக் கலைஞர்கள் உள்பட 461 பணியிடங்கள் (வேலைவாய்ப்புச் செய்திகள்)

தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறையில் 23 இளநிலை புகைப்படக் கலைஞர்கள் உள்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 461 பணியிடங்களுக்கு மே 27 முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுக்கான (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, வேளாண் பொறியியல் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை, தொல்லியல்துறை, சுற்றுலாத்துறை, குடும்ப நலத்துறை உள்பட பல்வேறு துறைகளில் 45 பதவிகள் காலியாக உள்ளன. மொத்தம் 461 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு மே 27 முதல் ஜூன் 25 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை திருத்திக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

25 இளநிலை புகைப்படக் கலைஞர் பணி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் காலியாக உள்ள 23 இளநிலை புகைப்படக் கலைஞர் பணிக்கான ஆள்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு எழுத்துத் தேர்வு மட்டுமே நடைபெறும்; நேர்காணல் கிடையாது. எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு மற்றும் துறை சார்ந்த பாடங்கள் இடம்பெறும். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் விஷூவல் கம்யூனிகேஷன் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.