சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2026-27 ஆம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பில் (Diploma in Co-oerative Management) சேர ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர். குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். வயது வரம்பு கிடையாது.
ஆன்லைனில் மட்டும்...
தகுதியுடைய
நபர்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஜூலை 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.100. ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நேரடியாகவோ தபால் மூலமாகவோ கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு விண்ணப்பித்திருந்தால், அந்த விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
சென்னை கூட்டுறவு
மேலாண்மை
நிலையம்