news-details
உலக செய்திகள்
“மனித மாண்பைப் பாதுகாத்திடுங்கள்”- ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் திருத்தந்தை லியோ

ஸ்பெயின் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை லியோ, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நிகழ்த்தினார். நாடாளுமன்றத்தில் திருத்தந்தை ஒருவர் உரையாற்றியது இதுவே முதல்முறையாகும். திருத்தந்தை தனது உரையில், “ஓர் உண்மையான சனநாயகச் சமூகம் என்பது சிந்தனை, மனச்சான்று மற்றும் மதச் சுதந்திரத்தை மதிக்கவேண்டும். மனித மாண்பு என்பது தற்காலிக அரசியல் பெரும்பான்மைகளுக்கு உட்பட்டது அல்லஎன்று அழுத்தமாகப் பதிவு செய்தார். மேலும், கருத்தரிப்பு முதல் இயற்கை மரணம் வரை அனைத்து மனித உயிர்களும்தூக்கி எறியும் கலாச்சாரத்திலிருந்துபாதுகாக்கப்படவேண்டும் என்றும், விளிம்புநிலை மக்களை அரவணைப்பதில்தான் ஒரு தேசத்தின் பெருமை அடங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். புலம்பெயர்வோரின் துயரங்கள் குறித்துப் பேசிய அவர், எந்தவொரு நாடும் இந்தச் சவாலைத் தனித்து எதிர்கொள்ள முடியாது என்பதால், உலகளவில் ஒருங்கிணைந்த மனிதநேய நடவடிக்கை அவசியம் என்றார். தொடர்ந்து, குடும்பங்களின் சமூகக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், போர் என்பது மனிதகுலத்தின் கூட்டுத் தோல்வி என்பதையும் சுட்டிக்காட்டினார்.