news-details
உலக செய்திகள்
“அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கூட்டு நம்பிக்கையை வளர்க்கும்” - திருத்தந்தை லியோ

அமெரிக்கா - ஈரான் இடையே கையெழுத்தான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தத்திற்குத் திருத்தந்தை 14-ஆம் லியோ தனது மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புப் பாதையில் பயணிக்கவேண்டும். சுமார் நான்கு மாத காலப் போருக்குப் பிறகு இரு நாடுகளும் இந்த உடன்படிக்கையை எட்டியுள்ளன. கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானின் அணு ஆயுத மையங்களை இலக்கு வைத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இதற்குப் பதிலடியாக ஈரானும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதுடன், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தையும் முடக்கியது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த அமைதி ஒப்பந்தம், மத்திய கிழக்கில் பரஸ்பர நம்பிக்கை, பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாட்டை வலுப்படுத்த உதவும். உக்ரைன் மீதான இரஷ்யாவின் தீவிரத் தாக்குதல்களால் அதிகரித்து வரும் அப்பாவி மக்களின் மரணங்கள் குறித்து நான் மிகுந்த வேதனைப்படுகிறேன். போரினால் ஏற்பட்டுள்ள இந்த வன்முறைகளைத் துறந்து நீதியான மற்றும் நிலையான அமைதி ஏற்பட அனைவரும் செபிப்போம் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.