news-details
தமிழக செய்திகள்
சமூகக் குரல்கள்

திறமையான அதிகாரிகளை நியமித்துவிட்டேன், சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்என்று கூறிய முதல்வரின் காதுகளுக்கு, பாலியல் வன்கொடுமையால் குழந்தைகளை இழந்து ஓலமிடும் பெற்றோரின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பில் எப்போது கவனம் செலுத்தப்போகிறீர்கள்? குற்றவாளிகள் சிறிதும் அச்சமின்றிக் குற்றச்செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், எதிர்க்கட்சியாக ஆறு மாதம் எதுவும் கேட்கக்கூடாது என நினைக்கிறீர்களா? அல்லது தி.மு..வின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?

உயர்மிகு. மு.. ஸ்டாலின், தி.மு.. தலைவர்

.வெ.. தனது தேர்தல் வாக்குறுதியில் குறு சிறு விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. ஆட்சிக்கு வந்தபின் ரூ. 50,000 வரை கடன் பெற்ற குறு சிறு விவசாயிகளின் கடன் தொகை முழுமையாகவும் ரூ.50,000-க்கு மேல் பெற்றவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்தது. விவசாயிகள் மத்தியில் இதற்கு எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து ரூ.75,000 வரை குறு, சிறு விவசாயிகள் பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்; ரூ.75,000-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறு சிறு விவசாயிகளிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ள தற்போதைய அரசின் அறிவிப்பு ஏற்கக்கூடியது அல்ல; எனவே, .வெ.. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு குறு சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யவேண்டும்.”

உயர்மிகு. எடப்பாடி பழனிச்சாமி, .தி.மு.. பொதுச்செயலர்

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு ஏதுவாக ஒரு சட்டம் இயற்றவேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்றிடவேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி ஒன்றிய அரசும் பெரும்பாலான மாநில அரசுகளும் சட்டம் இயற்றவில்லை என்பது கவலையளிக்கிறது.” 

உயர்மிகு. தொல். திருமாவளவன், விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர்