news-details
உலக செய்திகள்
“போர் சிக்கல்களைத் தீர்க்காது; துயரங்களையே விளைவிக்கும்”- உக்ரைன் தாக்குதலுக்குத் திருத்தந்தை லியோ கண்டனம்

உக்ரைன் மற்றும் லெபனான் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள் குறித்துத் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ள திருத்தந்தை 14-ஆம் லியோ, போரினால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், “உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ளதை நான் கவலையுடன் கவனித்து வருகிறேன். ஏவுகணைகளும் ட்ரோன்களும் விழும் இடங்களில் நம்பிக்கைகள் சிதைகின்றன; வழிபாட்டுத் தலங்களும் வீடுகளும் அழிக்கப்பட்டு, அப்பாவி உயிர்கள் பலியாகின்றன. போர் பாதுகாப்பைத் தராது; மாறாக, வெறுப்பையும் துயரத்தையும் மட்டுமே விளைவிக்கும்என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும், லெபனான் மீது நடத்தப்படும் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகவும் அவர் செபித்தார். அன்னை மரியா தாய்மைப் பாசத்துடன் நம்மைப் பாதுகாப்பார் என்று லெபனான் திருப்பயணிகளுக்கு அவர் ஆறுதல் கூறினார். குழந்தைகளுக்கு இறையன்பையும் பிறரன்பையும் கற்றுத் தரும் அனைத்துத் தாய்மார்களுக்கும் திருத்தந்தை தனது நன்றியையும் ஆசிரையும் வழங்கினார். கருவுற்றது முதல் இயற்கை மரணம் வரை ஒவ்வொரு மனித உயிரையும் பாதுகாக்க வேண்டுகோள் விடுத்தார்.