“பெண்கள் இடஒதுக்கீடு என்ற பெயரில், தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள ஒன்றிய பா.ச.க. அரசு முயற்சித்து வருகிறது. இது தென் மாநிலங்களின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில் உள்ளது என்பதை நாம் அறிவோம். நாடாளுமன்றத்தில் தொகுதிகள் மறுசீரமைப்பு மசோதா மீண்டும் கொண்டுவரப்பட்டால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தோற்கடிக்கப்படும்.”
திருமிகு. ப.
சிதம்பரம்,
மேனாள்
மத்திய
நிதி
அமைச்சர்
“தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலைப் பா.ச.க.
திருடிவிட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைகளைப் பயன்படுத்தி இலட்சக்கணக்கானோர் பெயர்களைச் சட்டவிரோதமாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டனர்.”
திருமிகு. செல்வி.
மம்தா
பானர்ஜி,
மேற்கு
வங்க
மேனாள்
முதல்வர்
“கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார்
மற்றும் அந்த மாநில அமைச்சர்கள் நான்கு முறை டெல்லி சென்று மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்துள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வாய்மூடி மௌனியாக உள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் மற்ற கட்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச் செல்லவில்லை என்றாலும் பரவாயில்லை, தனது அமைச்சர்களை அழைத்துக் கொண்டு பிரதமரையும், நீர்வளத்துறை அமைச்சரையும் சந்தித்து மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். காவிரி மற்றும் மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் அமைதி தமிழ்நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும். காவிரி விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துவிட்டால் மட்டும் போதாது; அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கவேண்டும்.”
திருமிகு. அன்புமணி
இராமதாஸ்,
பா.ம.க.
தலைவர்
“மணல், தாதுப் பொருள்கள் சட்ட விரோதமாக, நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குப் பல மடங்கு அதிகமாக
எடுத்தது தொடர்பாக ஒன்றிய அமலாக்கத்துறை கணிசமான ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சமர்ப்பித்த அறிக்கை அரசின் ஆய்வில் உள்ளது. மதுரை உயர் நீதிமன்றம் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சி.பி.ஐ.
விசாரணைக்கு உத்தரவிட்டது; பல இடங்களில் சோதனையும்
மேற்கொள்ளப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் ஒரு மேல்முறையீட்டில் உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்துள்ளது. இந்தத் தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.”
திருமிகு. ஆர்.
நடராஜ்,
மேனாள்
காவல்துறை
தலைவர்