news-details
உலக செய்திகள்
காங்கோவில் எபோலா பாதிப்பு: உலக நாடுகளின் உதவிக்குத் திருத்தந்தை வேண்டுகோள்!

காங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட உலக நாடுகள் உடனடியாக முன்வரவேண்டும் என்று திருத்தந்தை லியோ கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், “காங்கோவில் பரவி பல உயிர்களைப் பலிவாங்கி வரும் எபோலா தொற்றைக் கட்டுப்படுத்த, உள்ளூர் சமூகங்களை உள்ளடக்கிய உலகளாவிய தடுப்பு நடவடிக்கைகள் அவசியம்என்று வலியுறுத்தியுள்ளார். இதுவரை 5,300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி விநியோகம் நடைபெற்று வந்தாலும், அப்பகுதியில் நிலவும் ஆயுத மோதல்கள் நிவாரணப் பணிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளன. மேலும், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின்சாம்போயே(Zamboyé) பகுதியில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்த நிகழ்விற்கும் திருத்தந்தை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறிய அவர், சுரங்கப் பணிகளில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.