“சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கக்கூடிய ஆராய்ச்சியை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். அவர்கள் மனிதச் சமூகத்திற்குப் பணியாற்றுவதுடன், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்குப் புதுமை வழிகாட்ட அனுமதிக்க வேண்டும். ஒரு பல்கலைக்கழகத்தின் மதிப்பு என்பது, மனிதர்களின் வாழ்க்கையை அது மாற்றுவதிலும், சமூகத்திற்கு அது ஆற்றும் பங்களிப்பிலும் அடங்கியுள்ளது. பல்கலைக்கழகங்கள் வெறுமனே வகுப்பறைகள் அல்ல; அவை மேன்மை, புதுமை படைத்தல், சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் மையங்கள் ஆகும். தொழில்நுட்பம் வேகமாக மாறிவரும் இந்தக் காலகட்டத்தில், இந்தியாவின் மொழி சார்ந்த வேற்றுமையை செழுமைப்படுத்துவது ஒரு தேசியப் பொறுப்பாகும்!”
மேமிகு. சி.பி.
இராதாகிருஷ்ணன்,
குடியரசுத்
துணைத்
தலைவர்
“வரும் அக்டோபர் 2-ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், கிராம சபையை மிகவும் பயனுள்ள மற்றும் வலுவான மக்களாட்சி அமைப்பாக மாற்றவேண்டும். அதன்படி, ஊராட்சிப் பிரதிநிதிகளின் மாதாந்திர மதிப்பூதியத்தைக் கணிசமாக உயர்த்தவேண்டும். கிராமங்களில் மதுக்கடைகள் அமைப்பது தொடர்பான முடிவுகளில் உள்ளூர் மக்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். கிராம சபையின் கூட்டங்களில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்களின் பங்கேற்பை நேரலை செய்யவேண்டும். கிராம சபைத் தீர்மானங்கள் மீது குறிப்பிட்ட கால வரையறைக்குள் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். கிராம சபை என்பது மக்கள் கேள்விகள் கேட்கவும் விவாதிக்கவும் உள்ளாட்சி நிர்வாகத்தைப் பொறுப்பேற்கச் செய்யக்கூடிய தளமாகவும் உயர்த்தவேண்டும்.”
திரு. கமலஹாசன்,
தலைவர்,
மக்கள்
நீதி
மையம்
“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்களை நவம்பர் 1-ஆம் தேதிக்குள் தமிழில் மாற்றவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டின் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் பொதுவெளிகளில் தமிழில் பெயர்ப் பலகை இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையும் இந்தி எதிர்ப்பு, மொழிப்போர் ஆகிய போராட்டங்களில் முதன்மையான நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே,
மக்கள் இயக்கங்களின் வாயிலாக வலியுறுத்தப்பட்ட இந்தக் கோரிக்கையை இன்று உயர்நீதிமன்றமே காலக்கெடு விதித்து நிறைவேற்ற உத்தரவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.”
திரு. சீமான்,
தலைமை
ஒருங்கிணைப்பாளர்,
‘நாம்
தமிழர்
கட்சி’