news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (13.09.2026)

அன்றாட வாழ்வின் வேகத்திலிருந்தும் இரைச்சலிலிருந்தும் சற்று விலகி, இறைவன் நம்மிடம் பேசுகின்ற இனிமையான படைப்பின் குரலுக்குச் செவிமடுக்கவேண்டும்.”

செப்டம்பர் 01, லவுதாத்தோ சி கிராமத்தில் திருத்தந்தை உரை

நீரைப் பாதுகாப்பது படைப்பாளர் மீதான அன்பின் அடையாளமாகவும், ஏழைகளின் வாழ்வுக்கான அர்ப்பணிப்பாகவும் அமைய வேண்டும்.”

செப்டம்பர் மாதத்திற்கான திருத்தந்தையின் இறைவேண்டல் கருத்து

தன்னலத்தைத் துறந்து, தங்கள் சிலுவையைச் சுமந்து இயேசுவைப் பின்பற்றும் அன்பின் வழி மட்டுமே வாழ்வின் வழி.”

ஆகஸ்டு 29, ஏரிகளின் அன்னை மரியா திருத்தலம் காஸ்தல் கந்தோல்போ

காயம் எதுவாக இருந்தாலும், குற்றம் எதுவாக இருந்தாலும், தீமை நமது மனிதத்தன்மையைச் சிதைக்க நாம் அனுமதிக்கக் கூடாது.”

ஆகஸ்டு 29, ஏரிகளின் அன்னை மரியா திருத்தலம் காஸ்தல் கந்தோல்போ

இறைவனின் செயல்களை ஒருபோதும் தீர்ப்பிடாமல், அவை நமது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருந்தாலும், இறைவன் தமது செயல்களின் வழியாக நமக்கு வெளிப்படுத்துவதைத் தாழ்ச்சியுடனும் இறைவேண்டலுடனும் கேட்கவேண்டும்.” 

ஆகஸ்டு 30 அன்று நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரை