news-details
தமிழக செய்திகள்
கோவை மறைமாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் பசிலிக்கா! (முதன்மைக் குருவின் வாழ்த்துரை)

கோவை மறைமாவட்டத்தில் கருமத்தம்பட்டி, புனித செபமாலை அன்னை பசிலிக்கா கோவை மறைமாவட்டத்தின் முதல் தலைமை ஆலயமாக உருவானது. இந்த அழகுமிக்க பசிலிக்கா, கோவை மறைமாவட்டத்திற்குப் பெரும் புகழைச் சேர்த்துக் கொண்டிருக்கின்றது. அன்னை இறைமக்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகின்றார். பசிலிக்கா நம்மையும் இறைவனையும் மிக நெருக்கமாகச் சந்தித்து உரையாட வைத்து, இறைவனின் அருளாசிரைப் பெற்றுக் கொண்டு நம்மை இறைவனுக்கு ஏற்ற மக்களாக மாற்றுகின்ற உன்னத இடமாக அமைந்திருக்கின்றது.

பசிலிக்காவிற்கு வரும் மக்கள் மீதும் அன்னை ஏராளமான ஆசிரையும் அருளையும் பொழிந்து வருகின்றார். எல்லா சனிக்கிழமைதோறும் இங்கு வருகின்ற மக்களே இதற்குச் சாட்சி. வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெறுகின்ற பெருவிழாவில் அனைவரும் கலந்துகொண்டு, அன்னையின் அன்பு ஆசிரைப் பெற்றுச்செல்ல அன்புடன் அழைக்கின்றேன். பசிலிக்கா அதிபர், உதவிப் பங்குத்தந்தை, ஆன்மகுரு மற்றும் பங்கு இறைமக்கள், வருகின்ற திருப்பயணிகள் அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பேரருள்தந்தை முனைவர் P. மெல்க்கியோர், முதன்மைக் குரு, கோவை மறைமாவட்டம்