news-details
உலக செய்திகள்
இசுலாமியர் மத்தியில் 30 ஆண்டுகள்! - “அந்நியனாக நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை”- தந்தை மாதேஜ்!

துர்க்மெனிஸ்தானில் சுமார் 30 ஆண்டுகள் கத்தோலிக்க மறைப்பணியாளராகப் பணியாற்றிய தந்தை ஆண்ட்ரசே மாதேஜ் OMI, மரியாதை மற்றும் அமைதியின் அடிப்படையில் அனைத்து மக்களுடனும் நல்லுறவை வளர்ப்பதே தனது முக்கிய இலக்காக இருந்தது என்று தெரிவித்துள்ளார். 1990-களின் இறுதியில் அவர் அங்குச் சென்றபோது கத்தோலிக்கத் திரு அவைக்கான பெரிய கட்டமைப்புகள் எதுவுமில்லை. இசுலாமியர் பெரும்பான்மையாக வாழும் சமூகத்தில், எளிய முறையில் மக்களைச் சந்தித்து, ஒன்றாகத் தேநீர் அருந்தி, நற்செய்தியைப் பகிர்ந்து சமூகத்தை உருவாக்கத் தொடங்கினார். 2000-ஆம் ஆண்டு உயிர்ப்புப் பெருவிழாவின் போது முதல் திருமுழுக்கு வழிபாடுகள் நடைபெற்றன. கிறித்தவ-இசுலாமிய மதத்தர்க்கங்களில் ஈடுபடாமல், அவர்களின் திருமணங்கள் மற்றும் இறுதிச்சடங்குகளில் கலந்துகொண்டு, அன்றாட வாழ்வில் அன்பைப் பகிர்வதையே அவர் தனது பணியாகக் கொண்டிருந்தார். “கிறிஸ்து வருகை தரும் இடத்தில், அவருடன் அன்பும் வருகிறதுஎன்று கூறும் அவர், பெரிய பிரகடனங்களை விட எளிய மனிதச் சந்திப்புகளே அமைதியை உருவாக்குகின்றன என்றார். தனது 30 ஆண்டுகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, கிறித்தவரும் இசுலாமியரும் வாசிக்கும் வகையில் The Lamb’ என்ற நூலை எழுதவிருப்பதாகவும் தந்தை மாதேஜ் குறிப்பிட்டுள்ளார்.