“உலகில் எந்த ஒரு பிரச்சினையும் பொதுவானதாகக் கருதப்படவேண்டும்; ‘உனது பிரச்சினை உன்னுடையது; எனது பிரச்சினை என்னுடையது’ என நாடுகள் கூறிவிட முடியாது. எந்த ஒரு நாட்டின் தனிப்பட்ட ஆதாயத்தையும்விட ஒட்டுமொத்த மனிதகுல அமைதி முக்கியமானது.”
மேன்மிகு சி.பி.
இராதாகிருஷ்ணன்,
குடியரசுத் துணைத் தலைவர்
“பொது
சிவில் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் அளவிற்குப் பா.ச.க.வுக்குப் பலம் உள்ளதா? பா.ச.க.
ஆளும் மாநிலங்களில் மட்டும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அது அனைவருக்கும் பொதுவானதா? பா.ச.க.
அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியில் இல்லை; இதுவரை பா.ச.க.-வினர் எந்தெந்தச் சட்டங்களைப் பற்றிப் பெரிதும் பேசி வந்தார்களோ, அதாவது ஒரே நாடு, ஒரே தேர்தல், இடஒதுக்கீடு போன்றவற்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவில்லை. இப்போது இதையும் நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவராமல் மாநிலங்கள் மூலம் நடைமுறைப்படுத்துகின்றனர்.”
திருமிகு. உமர்
அப்துல்லா,
முதல்வர்,
ஜம்மு-காஷ்மீர்
“வாகனங்களில்
வேகக்கட்டுப்பாட்டுக்
கருவிகளைப் பொருத்துவது தொடர்பான விதிமுறை முறையாகப் பின்பற்றப்படுவதை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் உறுதி செய்யவேண்டும். மத்திய மோட்டார் வாகன விதிமுறைகள் 1989-இன் விதிமுறை 125-H-இன்படி அனைத்துப் பொது போக்குவரத்து வாகனங்களிலும் அந்த வாகனங்கள் இருக்கும் இடத்தைக் கண்டறியும் கருவியும் அவசரகாலப் பொத்தானும் இருக்கவேண்டும். இதைப் பின்பற்றச் செய்வது தொடர்பான நிலவர அறிக்கையை அனைத்து மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும். கடந்த ஜூன் மாதத்தில் தேசிய சாலைப் பாதுகாப்பு வாரியம் அமைக்கப்பட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அந்த வாரியம் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வந்துள்ளதா? இல்லையா? என்பது குறித்து உச்ச நீதிமன்றத்திற்கு ஒன்றிய அரசு தெரியப்படுத்த வேண்டும்.”
உச்ச நீதிமன்றம்