“நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுவில் ஒரு வழக்கின் விவரங்களை மட்டுமே நாம் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், அந்த மனுவைத் தாக்கல் செய்த நபர் ஏற்கெனவே எதை இழந்தார்? அல்லது நீதிமன்றங்களிடம் எதை எதிர்பார்த்து வந்துள்ளார்? என்பதை அந்த மனுவால் கூற முடியாது. ஆகவே, நீதிமன்றங்களில் மனுவைத் தாக்கல் செய்பவரை வெறும் மனுதாரராகப் பார்க்காமல், மனிதராகப் பார்க்கவேண்டும். வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிக்கும்போது கனிவாக நடந்துகொள்வது அவசியம். நீதியை மதித்து நிலைநாட்டி நீதிமன்றத்தின் முன்னிற்கும் நபர் எவ்வளவு எளியவராக, எவ்வளவு துயரமான நிலையில் இருந்தாலும் அவரின் பிரச்சினை மீது கவனம் செலுத்தி அவரின் குரலைக் கேட்பது நீதிபதியின் கடமை.”
மேமிகு. சஞ்சய்
கரோல்,
உச்ச
நீதிமன்ற
மேனாள்
நீதிபதி
“அரசுப்
பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களை அரசு முறையான ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். அடிப்படைக் கட்டமைப்புகள் எப்படி இருக்கின்றன? போதிய வகுப்பறைகள் உள்ளனவா? கழிப்பறை வசதிகள் நிலை என்ன? ஆசிரியர்கள் பற்றாக்குறையா? ஆசிரியர்களின் பணிக் கலாச்சாரத்தை மேம்படுத்த என்ன செய்யலாம்? இவை உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து, அரசுப் பள்ளிகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் தலையாய பொறுப்பு.”
மேமிகு. இராமகிருஷ்ணன்,
தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
அகில
இந்திய
கட்டுப்பாட்டுக்
குழு
“கேரளம்
- தமிழ்நாடு இடையேயான வனப்பகுதிகளில் இரவு நேரப் போக்குவரத்திற்கு முழுமையான தடை விதிப்பதற்குப் பதிலாக, வனவிலங்குகளின் நடமாட்டத்தை கருத்தில் கொண்டு, அறிவியல் அடிப்படையிலான குறிப்பிட்ட நேரங்களில் கட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்தை அனுமதிக்கவேண்டும். கேரள கடற்கரைக்கு அப்பால் கடலில் மணல் அகழ்வுக்கான கனிமவளப் பகுதிகளை ஏலம் விடுவதற்கு முன்பு, சுற்றுச்சூழல் மற்றும் மீனவர் வாழ்வாதாரம் குறித்த முழுமையான அறிவியல் ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.
போதைப்பொருள்
கடத்தல், மாநிலங்களுக்கு இடையேயான குற்றக்குழுக்கள், சட்ட விரோதக் குடியேற்றம், இணையவழி அச்சுறுத்தல்கள் ஆகியவற்றைத் தடுக்க மாநிலங்களுக்கு இடையே நிகழ் உளவு தகவல் பரிமாற்றம், கூட்டு நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த ரோந்துப் பணிகளை அதிகரிக்கவேண்டும். எல்லைப் பிரச்சினைகள் மற்றும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளுக்கு மாநில அரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும்.”
மேமிகு. வி.டி.
சதீசன்,
கேரள
முதல்வர்