news-details
வத்திக்கான் செய்திகள்
வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தத் திருத்தந்தை உத்தரவு

வத்திக்கான் திருத்தூது ஆவணக் காப்பகம் (Vatican Apostolic Archive) மற்றும் வத்திக்கான் திருத்தூது நூலகத்தின் (Vatican Apostolic Library) சேமிப்பு இடங்களை விரிவுபடுத்தவும், இதற்காகப் புதிய கட்டிடம் ஒன்றை உருவாக்கவும் திருத்தந்தை லியோ உத்தரவிட்டுள்ளார். வத்திக்கானின் வரலாற்றுச் சிறப்புமிக்க நூல்கள் மற்றும் ஆவணங்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகப் பெருமளவில் அதிகரித்துள்ளதால், தற்போதுள்ள இடவசதி போதுமானதாக இல்லை எனத் திருத்தந்தை தனது கையெழுத்திட்ட அதிகாரப்பூர்வ ஆவணத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக வத்திக்கான் நகர எல்லைக்குள்ளேயே அமைந்துள்ளஃபோண்டானா டெல் ஆட்டோபார்க்கோ(Fontana dell’Autoparco) மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் இத்துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், நவீன கட்டிடக் கலை மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்படவுள்ள புதிய கட்டிடத்தின் நிதியமைப்பிற்காகவத்திக்கான் அறக்கட்டளை(Vatican Instrumental Foundation) ஒன்றும் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.