news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (27.09.2026)

நூலகம் என்பது வெறுமனே நூல்கள் நிறைந்த அமைதியான இடமல்ல; அது உண்மையைத் தேடவும், கருத்துகளைப் பகிரவும், உரையாடலை வளர்க்கவும் உதவும் இடம்.”

செப்டம்பர் 14, வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்திற்கும், அப்போஸ்தலிக்க நூலகத்திற்கும் சென்று திருத்தந்தை ஆற்றிய உரை

ஒரு போட்டியில் ஒரு தரப்பு வெற்றிபெறும்; மற்றொரு தரப்பு தோல்வியடையும். ஆனால், போரின் பின்னால் மக்கள் உயிரிழக்கின்றனர்; வாழ்நாள் முழுவதும் காயங்களுடன் வாழ்கின்றனர்; அச்சத்தில் தவிக்கின்றனர்.”

செப்டம்பர் 11, கார்கிவ்-ஜபோரிஜியா மறைமாவட்டத்தின் ஆயர் பாவ்லோ, ஹோன்சாருக் திருப்பீடத்தில் திருத்தந்தை லியோ அவர்களுடன் உரையாடல்

ஒவ்வொருவரின் தனித்துவமும்அனைவருக்கும் ஒரு செல்வமாகமாறும் வகையிலானஆன்மிக ஒன்றிணைந்த பயணம்மிகவும் முக்கியமானது.”

செப்டம்பர் 12, Communio Internationalis Benedictinarum (CIB) அமைப்பின் கருத்தரங்கில் பங்கேற்றவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது...

மன்னிப்பு என்பது வெறுப்பு, பிளவு, வன்முறை ஆகியவற்றை எதிர்கொண்டு, அமைதியையும் அன்பையும் வளர்க்கும் ஆற்றல் கொண்டது.”

செப்டம்பர் 13, ஞாயிறன்று  வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் மூவேளைச் செபவுரையின்போது...

நமது காலத்தின் முன்னேற்றம் புதிய அழிவுகளை உருவாக்காமல் குறிப்பாக, மிகவும் தேவையில் இருப்பவர்களுக்குப் பாதுகாப்பான இல்லமாகவும் அடைக்கலமாகவும் அமையவேண்டும்.”

Fratelli tutti: வத்திக்கானில் வடக்கு - தெற்கு சமூக - சுற்றுச்சூழல் உரையாடல்