அன்புள்ளம் கொண்ட அருள்பணியாளர்களே! அருள்சகோதரிகளே, அருள்சகோதரர்களே, ‘நம் வாழ்வு’ வாசக பெருமக்களே... இறை இயேசுவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் புனித செபமாலை அன்னையின் பெயரால் வாழ்த்துகளையும் செபங்களையும் உரித்தாக்கிக்கொள்கின்றேன்.
புனித
செபமாலை அன்னை தன்னை அண்டி வருவோருக்கு எல்லாம் ஏராளமான நன்மைகளையும் புதுமைகளையும் புரிந்து வாரி வழங்கி வருகின்றார். கவலையோடும் கண்ணீரோடும் செபிப்பவர்கள் அனைவருக்கும் ஆண்டவரின் ஆசிரோடு அன்னை அருள்மழை பொழிகின்றார். இப்பேற்பட்ட அன்னைக்கு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் ஞாயிறு அன்று பெருவிழா எடுக்கப்படுகின்றது. இந்த ஆண்டும் கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னை பசிலிக்காவின் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட இருக்கின்றது. இதில் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு இறை இயேசுவின் பரிந்துரை வழியாக அன்னையின் ஆசிர் பெற அன்புடனும் பாசத்துடனும் அழைக்கின்றேன். இறையாசிர்!
+ மேதகு
முனைவர் லெ.
தாமஸ்
அக்குவினாஸ்,
கோவை ஆயர்