news-details
சிறப்புக்கட்டுரை
சனாதனம்: சமூக நீதிக்கு எதிரானது!

சனாதனம்என்பது சமஸ்கிருத மொழிச் சொல்லாகும். சனாதனம் என்றால் என்றும் நிலைத்திருப்பது, அழியாதது, தொடக்கமும் முடிவும் இல்லாதது, காலங்களைக் கடந்தும் நிலைத்து இருப்பது. பழமை மிகு ரிக் வேதத்திலும், பாகவத புராணம் போன்ற இந்து மதம் சார்ந்த புத்தகங்களிலும்சனாதனம்என்ற வார்த்தை காணக்கிடைக்கிறது.

சனாதனம்பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகளாலும் ஞானிகளாலும் உருபெற்றது. அது உலகின் தொடக்கம், படைப்பின் மூலம். எதுவென அறிந்துகொள்ள தத்துவங்கள் வழியும், வாய்மொழி உபதேசங்கள் வழியும் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்களைப் போதித்தது. மேலும், ஒரே கடவுள், கர்ம வினை, புனர்  ஜென்மம், தர்மம், முக்தி என்ற  மதக் கடமைகளை வலியுறுத்துகிறது.

19-ஆம் நூற்றாண்டுகளில் சுவாமி தயானந்த சரஸ்வதிஆரிய சமாஜ்என்ற இந்துமதப் புரட்சி அமைப்பை உருவாக்கினார். இந்து மதத்தில் சிலை வழிபாடு, சாதிமுறை  ஒழிப்பு, உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம், பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை வலிந்து எதிர்த்தார். ‘ஆர்ய சமாஜ்என்ற அமைப்பை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து பிரம்ம சமாஜ், பார்த்தன சமாஜ் போன்ற இந்துமதப்  புரட்சி அமைப்புகள் உருவாயின.

இந்துமதப் பழமைவாதிகள் பாலகங்காதர திலகர் தலைமையில்சனாதனம்என்பதே இந்து மதத்தின் ஆணிவேர்; சனதானம் நிலைபெற்ற தர்மம்; சனாதன விதிகளை மாற்றத் தேவையில்லை; ‘நாங்கள் சனாதனவாதிகள்என அறிவித்துக் கொண்டனர்.

19-ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட பிரிட்டிஷ் மக்கள்தொகை கணக்கெடுப்புகளில், தங்களை  ‘சனாதனவாதிகள்என மதரீதியில் பதிவுசெய்து கொண்டனர். ‘சனாதனம்என்பது பிரிந்திருந்த இந்துமதப் பிரிவுகளை ஒருங்கிணைக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை, இந்துமத ஒற்றுமைச் சொல்லானது.

வட இந்தியாவில் மதபீடங்களும் மதவாதிகளும் தங்களைசனாதனவாதிகள்எனப் பெருமையாகக் கூறி, மக்களிடமும் மனுதர்மத்தை எடுத்துச் சென்றனர். ‘சனாதனம்என்பதை இந்து மக்களின் வாழ்க்கைநெறி  எனப் பரப்பினர். இன்று வட இந்திய அரசியலில் சனாதனம் என்பது இந்துமதக் கோட்பாடு, வாழ்வியல் நெறி என்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றனர். இன்றுவரை தொடரும் வட இந்திய சாதிய வன்முறைகளுக்கு அங்குள்ள மனுதர்மமே அடிப்படை என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.

தமிழ்நாட்டில் நீதிக்கட்சி முதல் திராவிட இயக்கங்கள் வரைசனாதனம்என்பது பிறப்பு அடிப்படையில், செய்கிற தொழில் அடிப்படையில் மனிதனைப் பிரிக்கிற ஆரிய மேலாதிக்கத்தின் அடையாளம் என்ற  விழிப்புணர்வை உருவாக்கினார். ‘சனாதனம்என்பது ஆரியர்களின் வாழ்வியல் கோட்பாடு என அடையாளமானது. திராவிட இனத்தை அடிமைப்படுத்தும் அரசியல் ரீதியான மதவாதிகளின் தந்திரம் என்ற வாதங்கள் புதியசமூக நீதிஅரசியலானது.

மனுசாஸ்திரம் பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் எனச் சமூக அமைப்பைப் படிநிலைகளாகப் பிரிக்கிறது. குலத்தொழில்களை வலியுறுத்துகிறது. பிராமணர்களிடம், பிற பிரிவு சாதி மக்களை அடிமைகளாக வைக்கிறது.

ரிக்வேத சுலோகங்கள் 10:90:12 இவ்விதம் கூறுகின்றன: தேவர்கள் யாகம் செய்து பலியாகிவிட்டனர். பிரம்மனின் உடலிலிருந்து மனிதர்கள் பிறக்கின்றனர். இங்குதான் வர்ணாசிரம, தர்மத்திற்கான அடிப்படை பிறக்கிறது. பிரம்மனின் படைப்பில் உயர்வு-தாழ்வு சாதிகள் உருவாகின்றன. ‘சனாதனம்என்பது மதம் சார்ந்த புரிதலில், முழு கோட்பாட்டு நெறிகளில் விவாதங்கள் தேவை இல்லை. ‘சனாதனம்என்பது சமூகநீதிக்கு எதிரானது என்பதே உறுதியானதாகும். தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரைசனாதன எதிர்ப்புஎன்ற அடையாள அரசியலை தி.மு.பேசுகிறது.

2023, செப்டம்பர் 2 அன்று முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய  விழாவில்,அன்றைய  தமிழ்நாட்டுத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “மக்களைப் பிரிக்கும் சனாதனத்தை ஒழிப்போம்என்றார். இப்பேச்சு இந்தியா முழுவதும் பரபரப்பானது. வட இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள்இம்முழக்கத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லைஎன்றனர். 2026, மே 12 அன்று நடந்த தற்போதைய எதிர்க்கட்சித்  தலைவரின் சட்டசபைப் பேச்சிலும், “மக்களைப் பிரிக்கும் சனாதனத்தை ஒழிப்போம்என்று பேசியே முடித்தார்.

இந்து மதம் என்பது வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள் என முக்கியப் பிரிவுகளைக் கொண்டது. வேதங்கள் ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என நான்கு பிரிவுகளைக் கொண்டது. வேதங்கள் வழிபாட்டு முறையை உள்ளடக்கியதாகும்.

உபநிடதம் என்பது குருவிடம் இரகசியமாகக் கற்றுக்கொள்ளும் தத்துவம் சார்ந்த வேதாந்தமாகும். 108 உபநிடதங்களும்உனக்கு உள்ளேயே கடவுள் இருக்கிறார்; அவரை வெளியே தேடாதேஎன்றே  தத்துவ வேதாந்தம் பேசுகிறது.

ஸ்மிருதி என்பது கடவுளால் அருளப்பட்டது, கேட்டு அறிந்தது. ஸ்மிருதி என்பது ஓர் எழுத்தும் மாற்ற முடியாதது, நிலையானது. ரிக்வேதம் ஓதும் முறையில் எழுத்துகூட  மாறாதது. யுனெஸ்கோ ரிக் வேதம் ஓதும் முறையைக் காப்பாற்றப்பட வேண்டிய பாரம்பரியமாக அறிவித்துள்ளது. ஸ்மிருதிகளே சனாதனத்தின் அடிப்படைச் சட்டங்கள். ஸ்மிருதி என்பது காலத்திற்கேற்ப மாறக்கூடியது. ஸ்மிருதி என்பது  ரிஷிகள் சொல்ல, சீடர்கள் எழுதுவது. இந்து மதப் புரட்சியாளர் தயானந்த சரஸ்வதி, “வேதத்திற்கு முரணாக இருந்தால் ஸ்மிருதியை ஒதுக்கலாம்என்றார்.

ரிக் வேதம் சனாதன தர்மம் குறித்துஅக்னி தர்ம சுலோகம்வழியாக வலியுறுத்துகிறது. “நிலையான தர்மங்களை, கடமைகளை மீறக்கூடாது; தாயைத் தெய்வமாக்கு; தந்தையைத் தெய்வமாக்கு; குருவைத் தெய்வமாக்கு; விருந்தினரைத் தெய்வமாக்கு; சத்தியத்தின் பாதையில் நட; தர்மத்தின் பாதையில் நடஎன்கிறது.

மகாபாரதத்தில் ஒரு காட்சி வருகிறது. போர்க்களத்தில் அர்ச்சுனன் கிருஷ்ணரிடம் கேட்கிறார்: “எதிரே நிற்பவர்கள் என் உறவினர்கள்; நான் எப்படிப் போர்புரிவது?”

கிருஷ்ணரின் பதில்மனுதர்மபடி குலதர்மம் கூறுகிறது: நீ சத்ரியன், உன் தொழில் போர் செய்வது.”

பிராமணர்களின் பெயரை உச்சரித்தால் நாக்கில் சூடு போடுகிறது மனுதர்மம். உயர்சாதியினர் செய்யும் தவறுகளுக்குத் தண்டனைகள் குறைவாகவும், அதே தவறுக்குப் பிற சாதியினருக்குத் தண்டனை அதிகமாகவும் மனுஅதர்ம நீதிகூறுகிறது. சட்ட உரிமைகள் இல்லாத சூத்திர மக்களை அடிமைகளாக மனுதர்மம் முன்னிறுத்துகிறது.

சனாதனம் என்ற நெறி, தேசத்தில் முன்னேறிய ஒரு சாதியினரை  முன்னிறுத்துவதாகவும், அவர்களின் உயர் நிலையைப் பாதுகாப்பதாகவும், ஆட்சி அதிகாரத்தில் அவர்களின் நிலையை உறுதிப்படுத்துவதாகவும் அமைகிறது. இதை நன்கு உணர்ந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் 1972, டிசம்பர் 25-இல் மனுஸ்மிருதியை தீயிட்டுக் கொளுத்தினார்.

சனாதன தர்மம் மனுஸ்மிருதியை உள்ளடக்கியது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எளிய மக்களுக்கான சமூக நீதிக்குப் புறம்பானது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு , மனு தர்ம சனாதன விதிகளுக்கு உள்பட்ட புதிய அரசமைப்புச் சட்டத்திற்குக் கனவு காண்கிறது.

தேசத்தின் குடிமக்களைச் சாதிரீதியாக அடிமைப்படுத்தும் சனாதன முறைக்கு எதிர்க்குரல் கொடுப்போம். தமிழ்நாட்டில் என்றும் சமூகநீதியைக் கண்ணின் இமையெனப் பேணுவோம்.